RSS

இசைக்கலை மூவகை

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

அவை, ஆடல், பாடல் மற்றும் கொட்டு எனப் பெறும்.

1.   ஆடல்
இக்கூத்து 11 வகைப்படும். இவற்றுள் நின்றாடுதல் ஆறும் (6), வீழ்ந்து விடுதல் ஆடுதல் ஐந்தும் (5) ஆகும். இவற்றை (அ) “அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்லுடன் நின்றாடலாறு.” ”(ஆ) துடி, கடையம், பேடு, மரக்காலே, பாவை, வடிவுடன் வீழ்ந்தாடலைந்து” என்ற நூற்பாக்களால் அறியலாம்.

2.   பாடல்
பாட்டு என்பது அக நாடகங்களுக்கும் புற நாடகங்களுக்கும் உரிய உருவாகும். அக நாடகங்களுக்குரிய உரு, ‘கந்தம்’ என்பது முதல் ‘பிரபந்தம்’ ஈறாக உள்ளவை 28; புறநாடகங்களுக்குரிய உரு, ‘தேவபாணி’ முதலாக ‘அரங்கொழி செய்யுள்’ ஈறாக செந்துறை விகற்பங்கள் அனைத்துமாகும். (அ) ‘கந்தம்’ என்பது அடிவரையறையுள்ளது; ஒரு தாளத்தாற் புணர்ப்பது. (ஆ) ‘பிரபந்தம்’ என்பது அடிவரையறை இல்லாதது; பல தாளத்தாற் புணர்ப்பது.

3.   கொட்டு
கொட்டு என்பது கொட்டப்படுகின்ற இசைக்கருவிகள்; இவை பாட்டுக்குரியவன; நாட்டியத்திற்குரியன; இவ்விரண்டிற்கும் உரியன என மூவகைப்படும். (அ) பாட்டிற்குரியன ‘கீதாங்கம்’ எனப்படும். பாடல் என்பது இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் ஆக எண்வகைப் பயனுடையதாகும். (ஆ) நாட்டியத்திற்குரியவை, ‘நிருத்தாங்கம்’ எனப்படும். இது அக்கூத்து, புறக்கூத்து இரண்டிற்கும் உரியது. கீற்று, கடிசரி முதலிய தேசிக்குரிய கால்கள் 14, சுற்றுதல், எறிதல் முதலாகிய வடுகுக்குரிய கால்கள் 14, உடல் தூக்கு முதலாகிய உடல் வர்த்தணை 9- ஆக 47ம் இதற்குரியன. (இ) இரண்டிற்கும் உரியது. ஆடலுக்கும், பாடலுக்கும் உரியை இது ‘தாளம்’ ஆகும். கொட்டு, அசை, தூக்கு, அளவு என நாஙு நிலைகளையுடையது. இவற்றின் விளக்கங்களை அடுத்த பதிவில் காணலாம். கொட்டு ஆவது அமுக்குதல். ‘அசை’ ஆவது தாக்குதல் ‘தூக்கு’ ஆவது தூக்கித் தாக்குதல். ‘அளவு” ஆவது, ஓசையின் எல்லை.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS