(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)
தொல்காப்பியர் காலம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டிற்க்உ முந்தியது என்று அறிஞர் கூறுகின்றனர். இவர் இயற்றிய நூல்- தொல்காப்பியம் நமக்கு கிடைத்துள்ள மிகத் தொன்மை வாய்ந்த இலக்கண நூலாகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களை உடையதாய் 1610 அகவற்பாக்களைக் கொண்டதாகும்.
தொல்காப்பியர் காலம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டிற்க்உ முந்தியது என்று அறிஞர் கூறுகின்றனர். இவர் இயற்றிய நூல்- தொல்காப்பியம் நமக்கு கிடைத்துள்ள மிகத் தொன்மை வாய்ந்த இலக்கண நூலாகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களை உடையதாய் 1610 அகவற்பாக்களைக் கொண்டதாகும்.
இந்த நூலில் இசை பற்றி பல அறிய செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐவகை நிலங்கள், ஐவகை யாழ் வகைகள், ஐவகைப் பறை வகைகள் சுட்டப்பட்டுள்ளன.
நிலம்
|
இன்ப இசை யாழ்
|
தொழில் இசை பறை
|
முல்லை நிலம்
குறிஞ்சி நிலம்
மருத நிலம்
நெய்தல் நிலம்
பாலை நிலம்
|
முல்லையாழ்
குறிஞ்சியாழ்
மருதயாழ்
நெய்தல்யாழ்
பாலையாழ்
|
ஏறுகோட்பறை
வெறிய்யாட்டுப்பறை
நெல்லரிகிரிணை
மீன்கோட்பறை
நிரைகோட்பறை / சூறை கோட்பறை
|
தொல்காப்பியத்தில் யாழ் ஒரு கருப்பொருளாகவும், “யாழின் பகுதி” ஒரு கருப்பொருளாகவும் குறிக்கப்பட்டுள்ளது. யாழ் ஏழு நரம்புகளைக் கொண்ட பெரும் பண்ணையும், யாழின் பகுதி சிறு பண்ணையும் குறித்தது. (முல்லை = காடு; குறிஞ்சி = மலை; மருதம்= வயல்; நெய்தல் =கடல்; பாலை= வறண்ட நிலம்)
யாழ் (பெரும்பண்)
|
பாலை
|
யாழின் பகுதி (சிறு பண்)
|
முல்லை யாழ்
குறிஞ்சி யாழ்
மருத யாழ்
நெய்தல் யாழ்
|
செம்பாலை
படுமலைப்பாலை
கோடிப்பாலை
விளரிப்பாலை
|
முல்லைத் தீம்பாணி
குறிஞ்சிப்பாணி
வைகறைப்பாணி
நுளையர் பாலை
|
மேலே கூறப்பட்டுள்ள 4 பாலைகளுக்குரிய இன்றைய இராகங்கள் முறையே அரிகாம்போதி, நடபைரவி, கரகரப்பிரியா, தோடி என்பவையாகும்.
தொல்காப்பியம் பல்வேறுவகை இசைப்பாடலைகளை விளக்குகிறது. (கலிப்பாடல், பரிபாடல், தேவபாணி, வெண்பா, ஆசிரியம், பண்ணித்து முதலியவை). மேலும் ஒலிகள் பிறக்கத் துணைச் செய்யும் உறுப்புகளை விரிவாக வகைப்படுத்திக் கூறுகிறது. நாவின் அசைவாலும், உதடுகளைக் குவிப்பதாலும், விரிப்பதாலும் இசை ஒலிகள் தோன்றுவது விளக்கப்பட்டுள்ளது. அடிவயிற்றினின்றி இசை ஒலி எழும்ப வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. துள்ளல், தூங்கல், அகவல் ஆகிய ஓசைகளை அமைக்கும் முறைகள் விளக்கப்பட்டுள்ளன. குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என பாடல் அடிகளின் வகை காலக் கணிதம் மூலம் சுட்டப்பட்டுள்ளது. குறள் – இருமையும், சிந்து – மும்மையும் (திச்ரம்), அளவு – நான்மையும் (சதுச்ரம்), நெடில் – ஐமையும் (கண்டம்), கழிநெடில் – அறுமையும் சுட்டுகின்றன.
பாணர், கூத்தர், விறலியர், துறை அமை நல்யாழ்துணைமையர், சூத்தர் முதலுயோர் தனித்தும், கூடியு, இசைத் தொழில் நடத்தியதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. முல்லை பண்ணும் குறிஞ்சி பண்ணும் மகிழ்ச்சி சுவைக்கு உரியது என்றும், நெய்தல் பண் இரங்கல் சுவைக்கு உரியது என்றும், மருத பண் வெகுளிச் சுவைக்குரியது என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எஞ்சியுள்ள பெரும் பொழுது, சிறுபொழுதுப் பற்றி தொல்காப்பியத்திற்கு முன்னரே பத்துபட்டிலும், எட்டுத் தொகையிலும் குறிப்பிடப்பட்டுள்ள்ன. பாடல்களைக் காலப்படுத்தி பாடும் முறை தொல்காப்பியம் தொடங்கி மரபாக வருகிறது. தொல்காப்பியத்திலுள்ள இசைச் செய்திகளை எல்லாம் தொகுத்தால் ஓர் அரிய இசைநூலை உருவாக்கலாம்.