RSS

சங்கீதம் என்பது சரீரம், சாரீரம், சுருதி, லயம் இவைகளைக் கொண்டது

சரீரம் :
சரீரம் என்றால் உடம்பு. உடம்பு நன்றாய் இருந்தால் தான் சாரீரம் நன்றாக இருக்கும்

சாரீரம் :
சாரீரம் என்றால் குரல். குரல் நன்றாக இருந்தால்தான், சுருதி நன்றாக சேரும். குரலை ஸாதக பலத்தால் நன்றாக வளமடையச் செய்ய முடியும்

சுருதி :
சுருதி என்பது, மந்திரஸ்தாயி ஷட்ஜம் (ஸ) மத்யஸ்தாயி பஞ்சமம் (ப) தாரஸ்தாயி ஷட்ஜம் (ஸ்) இந்த மூன்று ஸ்வரங்களும் சேர்க்கம் இனிமையாய் ஒலிப்பதாகும். முக்கியமாகக் காது நன்றாய் கேட்க வேண்டும். பாடும் போதோ, வாத்யங்களில் வாசிக்கும் போதோ, சுருதியை நன்றாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். சுருதியை தாயாருக்குச் சமமாகச் சொல்லப்படுகிறது.

லயம் :
லயம் என்றால் தாளம். எண்ணிக்கையின் சமமான இடைவெளியை குறிக்கும். தாளத்தை தகப்பனாருக்கு சமமாக குறிப்பிடுவார்கள்.

கர்னாடக சங்கீதம் :
கர்னாடக சங்கீதம் என்பது, ஸ்வராளி வரிசைகள், கீதங்கள், வர்ணங்கள், ராக ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரங்கள் முதலிய அம்சங்களைக் கொண்டதாகும்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

மேளகர்த்தா ராகங்கள்

ஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்கீததில் முக்கியமானது கர்த்தா ராகங்கள் (தாய் ராகங்கள்) என்பது. அவைகள் மொத்தம் 72. ரி, க, ம, த, நி, என்கிற விக்ருதி ஸ்வரங்களின் மூன்றுவித ப்ரஸ்தாரங்களினால் 72 மேளகர்த்தாக்கள் ஏற்பட்டன.

இந்த 72 மேளகர்த்தாக்களில் முதல் 36 ராகங்களுக்கு “சுத்த மத்யம” ராகங்கள் என்றும், அடுத்த 36 ராகங்களுக்கு “ப்ரதி மத்யம” ராகங்கள் என்றும் பெயர்.

சுத்த மத்யம ராகங்கள்

 1. கனகாங்கி
 2. ரத்னாங்கி
 3. கானமூர்த்தி
 4. வனஸ்பதி
 5. மானவதி
 6. தானரூபி
 7. சேனாவதி
 8. ஹனுமதோடி
 9. தேனுகா
 10. நாடகப்ரியா
 11. கோகிலப்ரிய
 12. ரூபவதி
 13. காயகப்ரியா
 14. வகுளாபரணம்
 15. மாயாமாளவகௌளை
 16. சக்ரவாகம்
 17. ஸீர்யகாந்தம்
 18. ஹாடகாம்பரி
 19. ஜங்காரத்வனி
 20. நடபைரவி
 21. கீரவாணி
 22. கரஹரப்ரியா
 23. கௌரீமனோஹரி
 24. வருணப்ரியா
 25. மாரரஞ்ஜனி
 26. சாருகேசி
 27. ஸரஸாங்கி
 28. ஹரிகாம்போஜி
 29. தீரசங்கராபரணம்
 30. நாகாநந்தினி
 31. யாகப்ரிய
 32. ராகவர்த்தினி
 33. காங்கேயபூஷிணி
 34. வாகதீஸ்வரி
 35. சூலினி
 36. சலநாட்டை
ப்ரதி மத்யம ராகங்கள்

37. ஸாலகம்
38. ஜலார்ணவம்
39. ஜாலவராளி
40. நவனீதம்
41. பாவனி
42. ரகுப்ரிய
43. கவாம்போதி
44. பவப்ரிய
45. சுபபந்துவராளி
46. ஷட்வித மார்கிணி
47. ஸீவர்ணாங்கி
48. திவ்யமணி
49. தவளாம்பரி
50. நாமநாராயணி
51. காமவர்த்தினி
52. ராமப்ரிய
53. கமனாச்ரம
54. விச்வம்பரி
55. ச்யாமளாங்கி
56. ஷண்முகப்ரிய
57. சிம்ஹேந்த்ரமத்யமம்
58. ஹேமவதி
59. தர்மவதி
60. நீதிமதி
61. காந்தாமணி
62. ரிஷபப்ரிய
63. லதாங்கி
64. வாசஸ்பதி
65. மேசகல்யாணி
66. சித்ராம்பரி
67. ஸுசரித்ரம்
68. ஜோதிஸ்வரூபிணி
69. தாதுவர்த்தனி
70. நாஸிகாபூஷணி
71. கோஸலம்
72. ரஸிகப்ரிய

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வேதங்கள் 4

ரிக்வேதம் இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந்நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமஸ்கிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இருக்கு வேதம், வேதகால சமஸ்கிருதத்தில் ஆக்கப்பட்ட 1,017 சுலோகங்களால் ஆனது. இச் சுலோகங்களுப் பல வேள்விக் கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இவ்வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான அக்கினி, தேவர்கள் தலைவனும், வீரனுமான இந்திரன், சோமன் என்போராவர். இவர்களைவிட மித்திரன், வருணன், உஷாக்கள், அஸ்வின்கள் என்போரும், சவிதர், விஷ்ணு, உருத்திரன், பூஷண், பிருஹஸ்பதி, பிரமனஸ்பதி, தியாயுஸ் பிதா, பிரிதிவி, சூரியன், வாயு, பர்ஜான்யன், வசுக்கள், மாருத்கள், ஆதித்தர்கள், விஸ்வதேவர்கள் போன்ற கடவுளர்களும், இந்நூலில் போற்றப்படுகிறார்கள்.இவ்வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டத) என்பவை இருக்கு வேதக் கடவுள் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.

யசுர் வேதம் இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சுக்கில யசுர்வேதம், கிருஷ்ண யசுர்வேதம் எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.
கிருஷ்ண யசுர்வேதம் கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை: தைத்திரீய சம்ஹிதைமைத்திராயனீ சம்ஹிதைசரக-கதா சம்ஹிதைகபிஸ்தல-கதா சம்ஹிதைஎன்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது. மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த சிரௌதசூத்திரங்கள், கிருஹ்யசூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.
சுக்கில யசுர்வேதம் சுக்கில யசுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை: வஜசனேயி மாத்தியந்தினியம்வஜசனேயி கான்வம்என்பனவாகும். முன்னையது வட இந்தியாவிலும் குசராத்திலும் நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.
பிராமணம்மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே சதபத பிராமணம் என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது.

சாம வேதம் கிரியைகளுக்கான மந்திரங்கள். சாம வேதம் என்பது இந்துசமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்.

அதர்வண வேதம் இது பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்த்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.
அதர்வண வேதத்தில் பில்லி சூன்யங்கள்(black magic) முதலியன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன


பெறப்பட்டது.... : நன்றி :  tamilhindu.com

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இந்துஸ்தானி இசை

வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும்
7 சுவரங்கள், 12 சுவரஸ்தானங்கள், 22 சுருதிகள், வாதி, சம்வாதி, விவாதி, அனுவாதி என்பன யாவும் இவ்விரு இசைகளுக்கும் பொதுவான அம்சங்களாகும். கருநாடக சங்கீதத்தில் 72 மேளகர்த்தாக்கள் (தாய் ராகங்கள்) இருப்பதைப் போன்றே ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் 10 தாட்கள் உண்டு.
கர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப அப்பியாச வரிசைகள் (ஸ்வராளி வரிசைகள்) மாயாமாளவகெளளை இராகத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. ஆனால் இந்துஸ்தானி சங்கீதத்தில் ஒவ்வொரு ராகத்திலும் பலடாஸ் என அழைக்கப்படும் சுவர அப்பியாச வரிசைகள் கற்பிக்கப்படுகின்றன.
‘கியால்’ மற்றும் ‘துருபாத்’ ஆகிய இரண்டும் இந்துஸ்தானிய இசையின் இரண்டு முதன்மை வடிவங்களாகும். எனினும் பல பிற மரபு ரீதியான மற்றும் பகுதியளவு மரபுசார்ந்த வடிவங்கள் உள்ளன. இந்துஸ்தானி இசையில் ஒரு டிரம் வகையான தபளா வாசிப்பவர்கள், வழக்கமாக காலத்தின் குறியீடான ரிதத்தை வைத்திருக்கின்றனர். மற்றொரு பொதுவான இசைக்கருவி கம்பிகட்டப்பட்ட தம்புரா ஆகும், இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் (ரீங்காரம்) இசைக்கப்படும். இந்த பணியை பாரம்பரியமாக தனியாகப் பாடுபவரின் மாணவர்கள் செய்கின்றனர். இது சலிப்படையவைக்கும் பணியாகத் தோன்றினாலும், உண்மையில், இதைப் பெறும் மாணவருக்கான வாய்ப்பு பெருமையானது மற்றும் அரிதானது. சாரங்கி மற்றும் ஆர்மோனியம் உள்ளிட்டவை பக்கவாத்தியத்திற்கான பிற இசைக்கருவிகள் ஆகும். மென்மையான காதல், இயற்கை மற்றும் பக்திப்பாடல்கள் ஆகியவை இந்துஸ்தானி இசையின் முதன்மைக் கருப்பொருள்களாகின்றன.
கச்சேரியானது வழக்கமாக ராகத்தின் மெதுவான விரிவுபடுத்தலுடன் தொடங்குகின்றது, இது பாதாத் என்று அறியப்படுகின்றது. இதன் கால வரம்பானது இசைக்கலைஞரின் பாணி மற்றும் முன்னுரிமையினைச் சார்ந்து நீண்ட நேரத்திலிருந்து (30–40 நிமிடங்கள்) மிகவும் குறைந்த நேரம் (2–3 நிமிடங்கள்) வரையில் நீடிக்கலாம். ராகம் நிலைநிறுத்தப்பட்டவுடன், சந்தமுள்ளதாக மாற பாடல் முறையைச் சுற்றிலும் இசை அலங்கரிப்பு தொடங்கி, மெதுவாக வேகமும் அதிகரிக்கின்றது. இந்தப் பிரிவானது ‘துருத்’ அல்லது ‘ஜோர்’ என்று அழைக்கப்படுகின்றது. இறுதியாக மோதுகை இசைக்கருவி வாசிப்பவர் சேர்ந்ததும் தாளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்துஸ்தானி இசையில் இசைக்கருவிகள் மற்றும் வழங்கல் பாணி இரண்டிலும் ஆர்வமுள்ள குறிப்பிடத்தக்க அளவிலான பெர்சியர்கள் உள்ளனர். மேலும் கர்நாடக இசை போன்றே இந்துஸ்தானிய இசையும் தன்னகத்தே பல்வேறு நாட்டுப்புற இசைகளையும் கொண்டுள்ளது.
இந்துஸ்தானிய இசை வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் தான்சேன் ஆவார். இவர் அக்பரின் அரசவையில் இரத்தினக் கல் போல் விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கர்நாடக சங்கீத வித்துவான்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

தாளம் - லயம்

தாளம் என்ற சொல்லிற்குத் தட்டிவருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள். இசை சம்பந்தமாகப் பேசும்போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கின்றது. ஒரே அளவாகத் தாளத்தை தட்டிவரும்போது அதில் ஓர் இசையுணர்ச்சி உண்டாகின்றது. இது ‘லய’ உணர்ச்சி எனப்பெறும். எப்படி ஏழிசை சுரங்களெல்லாம் ஆதார சுருதியிலே சேர்ந்தொலிக்கும் போது ஓர் உணர்ச்சி உண்டாகின்றதே, அதேபோல தாளத்தையும் ஓர் அளவாய்த் தட்டிப் போட்டுவரும்போது அதுமாதிரியான உணர்ச்சி உண்டாகின்றது. ‘லயம்’ என்ற சொல்லிற்கு ஒன்றுதல் என்பது பொருள்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

Vanessa Mae & AR Rahman - Raaga's Dance song

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

Nithyasree Mahadevan: Carnatic (S. Indian) Vocal Recital

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

அகாரசாதகம்

உயிரெழுத்துகளாகிய ஆ, ஈ, ஊ, என்ற அகார, இகார, உகார உயிரினாலேயே சுரங்களைப் பாடுதல் வேண்டுமென்பது நம் மூதாதியினர்களின் கருத்தாகும். அதாவது ஒவ்வொருவரின் தொண்டையிலிருந்து வரும் உயிரொலியானது சுருதியோடு ஒன்றி ஆ- என்றோ, ஈ-என்றோ, ஊ-என்றோ எது பொருந்துமோ அதைக் கூறி, ஏழிசைகளையும் இயற்றுதல் வேண்டுமாம்.

விளக்கம் :-
ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ்
ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ
ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ
ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ
ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ
ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ

இவ்வாறு ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்று அகார, இகார, உகார முறையில் பாடும்போது, ஏழிசைகளும் இவ்வுயிர்களினால் தொடர்ந்து ஒலியோடு வரல்வேண்டும். இடைவெளிவிட்டுக் காணுதல் கூடாது.

இம்முறையைதான் “ அகாரசாதம்” எனக் கூறுகின்றனர்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இலக்கிய இலக்கணம் (இசை)

யானை, நாய், பூனை, கிளி, காக்கை, மயில் முதலிய உருவ பேதங்களைச் சிறு குழந்தைகளும் பகுத்து அறிகின்றனர். பின்பு அக்குழந்தைகள் எல்லோரும் பேசுவதிலிருந்தும் அவற்றின் வெவ்வேறு பெயர்களைத் தாமே அறிந்து கொள்கின்றனர். நாளடைவில் அவர்கள் செய்கை, குணம், உருவம் முதலியவற்றை எடுத்துக்கூறவும் முயலுகின்றார்கள்.

இவைபோல இசையுலகாவிய சங்கீத உலகத்தில் நிறப்பண்களின் (இராகங்களின்) விகற்பங்கள், பாட்டின் விகற்பங்கள், இசைக்கருவிகளின் ஒலிவிகற்பங்கள், அவற்றின் உருவம், அவற்றின் உருவம், அவற்றைத் திரும்பச் சொல்லும் திறமை முதலிய இவை, இயற்கையில் பல தடவை கேட்பதனால் அடைய பெறுகின்றன. இந்த அறிவு இலக்கிய அறிவு எனப்பெறும்.

யானைக்கும் பூனைக்கும் என்ன பேதம், ஆட்டிற்கும் மாட்டிற்கும் என்ன பேதம், குதிரைக்கும் கழுதைக்கும் என்ன பேதம், குரங்கிற்கும் மனிதனுக்கும் என்ன பேதம் என்பவற்றை நேரில் பார்த்துக் கவனித்து அறிந்தபடி அவற்றின் வேற்றுமையான அடையாளங்களை ஒருவன் எடுத்து விவரமாய் கூறுவதே இலக்கணப் பாடமாகும். இலக்கியமென்பது ஒன்றை மேற்பரப்பாய்ப் (ஸ்தூலமாய்) பார்த்து அறிவதைக் குறிக்கும் போது, இலக்கணமென்பது அதன் வெவ்வேறு பாகங்களின் அங்க அடையாளங்களை எடுத்துக் கூறுவதைஹ் குறிப்பதாகும்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

யாழ்


யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யா+ழ் = யாழ், நரம்புகளால் கட்டப்பட்டது என்பது பொருள்.
பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற கருவியோ, யாழ் போன்ற தந்தி அல்லது கம்பி இசைக் கருவியோ இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். தமிழகத்திலும் ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி யாழ் இருந்திருக்கிறது. இன்று அந்தக் கருவி இல்லை.

பொதுக் காலம் (கி.பி.) 10ம் நூற்றாண்டில் இந்தக் கருவி மறைந்து ருத்ர வீணை, கின்னாரி, கச்சபி, பின்னர் சிதார், சாரோட், சரஸ்வதி வீணை போன்றவை பிரபலம் ஆகின. சீரியாழ் என்பது வீணை போன்ற ஒரு கருவிதான்யாழ் பார்ப்பதற்கு வில்லைப் போல் இருப்பதால் அப்பெயர் பெற்றது. யாழ் கருவியின் நவீன வடிவம் மயில் யாழ். கம்பி இசைக் கருவிகளில் ஒன்றான இது, மயில் வடிவில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அப்பெயர் பெற்றது.

சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர், யாழ் சிந்து வெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்[ஆதாரம் தேவை]. அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் உறுப்பமைதி தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.

நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது.

சிலப்பதிகாரத்தில் யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எப்படி இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிக்கிறார்கள். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார்.

யாழ் வகைகள்

• பேரியாழ் (21 நரம்புகளை உடையது)

• மகரயாழ் (17 நரம்புகளை உடையது)

• சகோடயாழ் (16 நரம்புகளை உடையது)

• செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது)

இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.

யாழ் நூலில் கூறப்படும் யாழ் வகைகள்:

• வில் யாழ்

• சீறி யாழ், செங்கோட்டியாழ்

• பேரி யாழ்

• சகோட யாழ்

• மகர வேல்கொடி யாழ்

• மகர யாழ் / காமன் கொடி யாழ்

• மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்

வீணையின் வரவே யாழின் செல்வாக்கையழித்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

சப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்...

சப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்

ஸ் - ஸட்ஜம் - குரல்
ரி - ரிஷபம் - உழை
க - காந்தாரம் - கைகிள்ளை
ம - மத்தியமம் - துத்தம்
ப - பஞ்ஜமம் - இளி
த - தைவதம் - விளரி
நி - நிஷாதம் - தாரம்

ஸ, ப -- ப்ருக்ருதி சுவரங்கள் (மாறுதல் இல்லாதது)
ரி, க, ம, த, நி -- விக்ருதி சுவரங்கள் (மாறுதல் உள்ளது)

ஸ -- ஸட்ஜம்
ரி1 -- சுத்த ரிஷபம்
ரி2 -- சதுச்ருதி ரிஷபம்
க1 -- சுத்த காந்தாரம்
க2 -- அந்தர காந்தாரம்
ம1 -- சுத்த மத்தியமம்
ம2 -- ப்ரதி மத்தியமம்
ப -- பஞ்ஜமம்
த1 -- சுத்த தைவதம்
த2 -- சதுச்ருதி தைவதம்
நி1 -- கைசிக நிஷாதம்
நி2 -- காகலி நிஷாதம்

சப்த சுவரங்களும் மிருகங்களின் ஒலியும்.....

ஸ -- மயிலின் ஒலி
ரி -- மாட்டின் ஒலி
க -- ஆட்டின் ஒலி
ம -- சிரவுஞ்சத்தின் ஒலி
ப -- குயிலின் ஒலி
த -- குதிரையின் ஒலி
நி -- யானையின் ஒலி

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

தமிழில் எண்களின் மதிப்பும் தமிழ் எண்களும்....

1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thousand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்து நூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = -நிகர்புதம் -one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 =  கனம் -hundred billion

1000000000000 = கர்பம் -one trillion

10000000000000 =  நிகர்ப்பம் -ten trillion

100000000000000 =  பதுமம் -hundred trillion

1000000000000000 =  சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 =  அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம்  -?////

1000000000000000000 0 =  பர்ரர்த்தம் --anyboby know

1000000000000000000 00 =  பூரியம் -<>?#%^&

1000000000000000000 000 = முக்கோடி  -&^*^%^#

1000000000000000000 0000 = மகாயுகம்  -??????????? ?????


எந்த மொழியிலிம் இடம் பெறாத, சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியில் மட்டுமே உள்ள அர்புதங்கள்....

தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை தமிழ் எண்கள் என்று கூறுவர் . இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களை போல் தமிழில் சுழியம் கிடையாது. தமிழ் எண்கள் தற்போது வழக்கில் இல்லை, தமிழில் எண்களை எழுத இந்தோ-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

 தமிழ் எண்கள்

௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இராகம்

இராகத்தைத் தமிழிசையில் நிரம் என்று அழைப்பர்..இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து "தாட்" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்ய ராகங்களாக வகுக்கப்படுகின்றன. 36 மேலகர்த்தா இராகங்கள் ப்ரதி மத்தியத்திலும்... 36 இராகங்கள் சுத்த மத்தியத்திலும் அமைந்திருக்கின்றன.....


‌இராகம் என்பது இந்திய பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று பலர் கூறுகின்றனர். இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது. இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்."இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகனத்தில்) கீழே செல்லும்போதும் (அவரோகனத்தில்) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகனத்திலோ அவரோகனத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கீத, வாத்திய, நிருத்தியம்

கீத, வாத்திய, நிருத்தியமாகிய இம்மூன்றும் சேர்ந்தது சங்கீதம் என்பது எவ்வாறோவெனின்:- கீதமென்பது பாட்டு. இந்த பாட்டை வசனநடை போல கூறலாம். அவ்வாறு கூறும்போது அது கீதம் என்ற எழுத்தின் நிலையைப்பெறும் இந்தப் பாட்டாகிய எழுத்துக்கள் வாத்தியமாகிய சுர அமைதியில் மேலும் கீழும் நல் ஒலியோடு பயின்று வரும்போது, அது கீதமும் வாத்தியமும் ஆகி அந்த கீதம் சுரஒலியாகிய வாத்தியத்தில் அமைதி பெருகின்றது. கருவியில் எழுத்தொலி பேசாதென்றும் அவற்றினிடமாகச் சுர ஒலி மட்டுமே வரப்பெறும். கீத வாத்தியமாகிய இவ்விரண்டையும் இசைக்கும் போது பாட்டின் எழுத்து, பாட்டின் கருத்து, அவைகள் அமைதிபெற்று வரும்- சுரங்கள், அவற்றின் நிறமாகிய இராகம், நிறத்திற்குரிய அச்சுரங்கள் நீண்டும், குறுகியும், வளைந்தும், சுழன்றும், குழைந்தும் பேசும் தன்மைகள், அதன் தாள அளவுகள், அத்தாள எடுப்புகள் யாவும் மனத்தில் ஒருவாறு பதிந்த பின்னரே இயக்கத்தக்கனவாகின்றன. எனவே மனதின் எண்ணங்களின் தொகுதியே இங்கு நிருத்தியாமாகின்றது. ஓர் இசைக்காரன் பாடும் போது இம்மூன்றும் சேர்ந்துவந்துதான் இசையானது.


சிலப்பதிகாரம் முத்தமிழ் பெருங்காப்பியம். அது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும், முத்தமிழ் இலக்கணத்தையும் செவ்வனே கூறுகிறது. இவற்றில் பல நுட்பங்கள் அடங்கியுள்ளன. கீதம் என்ற பகுதியை இயலென்றும், வாத்தியம் என்ற பகுதியை இசையென்றும் நிருத்தியம் என்ற பகுதியை கூத்தென்றும் எடுத்து, அதன் இலக்கண அமைதிகளைச் செவ்வனே உணர்த்தியுள்ளனர். எனவே, இம்மூன்றின் சேர்க்கையே முத்தமிழ் காப்பியம் ஆயி்ற்று. இதுபோல, இயலிசை நாடகமாகிய இம்மூன்றும் சேர்க்கையின்றி இசை (கீத, வாத்திய, நிருத்தியம்) சிறப்படையாது.

மேற்பரப்பாகப் பார்த்தாலும் இயலிற்குரிய இலக்கணமும், இசைக்குரிய இலக்கணமும், கூத்திற்குரிய இலக்கணமும் இம்மூன்றுவகை இலக்கணமின்றி இசை இலக்கணம் அறிதற்கியலாது. கீதம் என்பதற்குச் சுரக்கூட்டம் என்றொரு பொருள் உண்டு. ஆதலால் ஏழிசையாகிய அந்த சுர எழுத்துக்கூட்டம் (கீதம்) வாத்தியமாகிய ஏழிசை ஒலிச் சூழலிலும் (வாத்தியம்), அவ் ஒலி இயக்கம் பாவமென்ற அசைவு, ஆட்டம், நீளல், குறுக்கல், சுழல்தல் (நிருத்தியம்) ஆகிய ஒலி வகைகளாலும் வரப்பெற்று மூன்றும் ஒருசேர மிளிர்கின்றதென்பதையும் நன்கு அறியலாம்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

சங்கீதம், தாளம்

கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளாங்கும்போது அது இசையாகின்றது (சங்கீதமாகின்றது). சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்


சங்கீதம்: "கீத வாத்ய நிருத்யஞ்ச த்ரயம் ஸங்கீத முச்யதே" (சங்கீத இரத்தினாகரம்). இலக்கியத்தில் பேச்சும், எழுத்தும், விவகாரமும் இருப்பனபோலவும், கூத்தில் மெய்பாடும், கரணவகைகளும், தாளத்தின் சதி அடைவுகளும் இருப்பன போலவும், இசையாகிய சங்கீதத்தில் கீதம், வாத்தியம், நிருத்தியம் ஆகிய இம்மூன்றும் அடங்கின


தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தற்போது எழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்."பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை,அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்."


ஏழு தாளங்கள்

துருவ தாளம், மட்டிய தாளம், ரூபக தாளம், ஜம்பை தாளம், திரிபுடை தாளம், அட தாளம், ஏக தாளம்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். --அருணகிரிநாதரின் திருப்புகழ்

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதாதிதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தாதிதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்துதிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே


இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.

திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,

திதி - திருநடனத்தால் காக்கின்ற

தாதை - பரமசிவனும்தாத - பிரமனும்

துத்தி - படப்பொறியினையுடைய

தத்தி - பாம்பினுடைய

தா - இடத்தையும்

தித - நிலைபெற்று

தத்து - ததும்புகின்ற

அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு

ததி - தயிரானது

தித்தித்ததே - தித்திக்கின்றதென்று

து - உண்ட கண்ணனும்

துதித்து - துதி செய்து வணங்குகின்ற

இதத்து - பேரின்ப சொரூபியான

ஆதி - முதல்வனே!த

த்தத்து - தந்தத்தையுடைய

அத்தி - அயிராவதம் என்னும் யானையால்வளர்க்கப்பட்ட

தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு

தாத - தொண்டனே!

தீதே - தீமையே

துதை - நெருங்கிய

தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்

அதத்து - மரணத்தோடும்

உதி - ஜனனத்தோடும்

தத்து
 
--தகர வரிசையில் பாடப்பட்ட திருபுகழ்.... தமிழின் அற்புதத்தை இதில் காணலாம்--

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பாட்டும் நானே பாவமும் நானே

பாட்டும் நானே பாவமும் நானே


பாடும் உனை நான் பாடவைப்பேனே

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்

காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ


அசையும் பொருளில் இசையும் நானே

ஆடும் கலையின் நாயகன் நானே

எதிலும் இயங்கும் இயக்கமும் நானே

என்னிசை நின்றால் அடங்கும் உலகே…


நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே

அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா

ஆடவா எனவே ஆடவந்ததொரு

பாடும் வாயினையே மூடவந்ததொரு


translation of the song.....

I am the song and I am the expression also

I made u a singer’


The mixing of music and the mode of singing

Is revealed by me

Have come to tell me stories


The music in movable objects is me

I am the chief of the dance art

It is me who make it function in every object

When my music stops, the world grinds to a halt


When I displace the entire world moves

Learn it, is ur snob greater than my music

This song will shut the mouth of

The man who has come to compete with the mandurian

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

‌தியாகராஜ சுவாமிகள்கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பெற்றிருப்பவர் தியாகராஜ சுவாமிகள். கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது பாடல்களே இடம்பெறுகின்றன. முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற இதர வாக்யேயக்காரர்களின் பாடல்களும் இடம் பெற்றாலும், பிரதானமாகப் பாடப்படுபவை இவரது பாடல்களே. இது நீண்டகாலமாக இருந்து வரும் பழக்கமென்பதை மகாகவி பாரதியாரின் "சங்கீத விஷயம்" எனும் கட்டுரைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். தியாகராஜ சுவாமிகள் தெலுங்கிலும், மற்ற இருவரும் பெரும்பாலும் சமஸ்கிருதத்திலும் பாடியிருக்கிறார்கள். தியாகராஜரின் கீர்த்தனைகளை தெலுங்கு மொழி தெரிந்தவர்கள்தான் என்பதல்லாமல் அம்மொழி தெரியாதவர்களும் உணர்வுபூர்மாக கேட்டு ரசிக்கிறார்கள். உலகமுழுவதிலுமுள்ள சங்கீத ரசிகர்களுக்கு சங்கீதம் என்றால் அது தியாகராஜருடைய சங்கீதம்தான்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வீணை

‌வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.

வீணையின் அமைப்பு

வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

புராணம்

புராணம் என்ற சொல், தமிழ் மொழியில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. "புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன."புராணம் என்கிற வடசொல், புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்பர். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் Myth என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வணக்கம்......

இறைக்கு வணக்கம்,
இறை தந்த தமிழுக்கு வணக்கம்.....

நித்தியவாணி அகப்பக்கத்திற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்....
முதன் முறையாக நான் இந்த அகப்பக்கத்தில் எழுத ஆர்வப்பட்டுள்ளேன்... நிச்சயமாக நல்ல கருத்துகளைப் பதிவு செய்வேன்.....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS