கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளாங்கும்போது அது இசையாகின்றது (சங்கீதமாகின்றது). சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்
சங்கீதம்: "கீத வாத்ய நிருத்யஞ்ச த்ரயம் ஸங்கீத முச்யதே" (சங்கீத இரத்தினாகரம்). இலக்கியத்தில் பேச்சும், எழுத்தும், விவகாரமும் இருப்பனபோலவும், கூத்தில் மெய்பாடும், கரணவகைகளும், தாளத்தின் சதி அடைவுகளும் இருப்பன போலவும், இசையாகிய சங்கீதத்தில் கீதம், வாத்தியம், நிருத்தியம் ஆகிய இம்மூன்றும் அடங்கின
தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தற்போது எழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்."பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை,அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்."
ஏழு தாளங்கள்
துருவ தாளம், மட்டிய தாளம், ரூபக தாளம், ஜம்பை தாளம், திரிபுடை தாளம், அட தாளம், ஏக தாளம்

2 comments:
இசையில் ஆர்வம் உள்ள நிதியவாணிக்கு ராஜாரசிகனின் வாழ்த்துக்கள் ,இனிதே தொடரட்டும் உஙகள் இசைப்பணி ..
உங்கள் பாராட்டுக்கும்... ஆதரவிற்கும்...மிக்க நன்றி நண்பா....
கருத்துரையிடுக