RSS

வேதங்கள் 4

ரிக்வேதம் இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந்நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமஸ்கிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இருக்கு வேதம், வேதகால சமஸ்கிருதத்தில் ஆக்கப்பட்ட 1,017 சுலோகங்களால் ஆனது. இச் சுலோகங்களுப் பல வேள்விக் கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இவ்வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான அக்கினி, தேவர்கள் தலைவனும், வீரனுமான இந்திரன், சோமன் என்போராவர். இவர்களைவிட மித்திரன், வருணன், உஷாக்கள், அஸ்வின்கள் என்போரும், சவிதர், விஷ்ணு, உருத்திரன், பூஷண், பிருஹஸ்பதி, பிரமனஸ்பதி, தியாயுஸ் பிதா, பிரிதிவி, சூரியன், வாயு, பர்ஜான்யன், வசுக்கள், மாருத்கள், ஆதித்தர்கள், விஸ்வதேவர்கள் போன்ற கடவுளர்களும், இந்நூலில் போற்றப்படுகிறார்கள்.இவ்வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டத) என்பவை இருக்கு வேதக் கடவுள் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.

யசுர் வேதம் இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சுக்கில யசுர்வேதம், கிருஷ்ண யசுர்வேதம் எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.
கிருஷ்ண யசுர்வேதம் கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை: தைத்திரீய சம்ஹிதைமைத்திராயனீ சம்ஹிதைசரக-கதா சம்ஹிதைகபிஸ்தல-கதா சம்ஹிதைஎன்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது. மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த சிரௌதசூத்திரங்கள், கிருஹ்யசூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.
சுக்கில யசுர்வேதம் சுக்கில யசுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை: வஜசனேயி மாத்தியந்தினியம்வஜசனேயி கான்வம்என்பனவாகும். முன்னையது வட இந்தியாவிலும் குசராத்திலும் நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.
பிராமணம்மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே சதபத பிராமணம் என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது.

சாம வேதம் கிரியைகளுக்கான மந்திரங்கள். சாம வேதம் என்பது இந்துசமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்.

அதர்வண வேதம் இது பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்த்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.
அதர்வண வேதத்தில் பில்லி சூன்யங்கள்(black magic) முதலியன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன


பெறப்பட்டது.... : நன்றி :  tamilhindu.com

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இந்துஸ்தானி இசை

வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும்
7 சுவரங்கள், 12 சுவரஸ்தானங்கள், 22 சுருதிகள், வாதி, சம்வாதி, விவாதி, அனுவாதி என்பன யாவும் இவ்விரு இசைகளுக்கும் பொதுவான அம்சங்களாகும். கருநாடக சங்கீதத்தில் 72 மேளகர்த்தாக்கள் (தாய் ராகங்கள்) இருப்பதைப் போன்றே ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் 10 தாட்கள் உண்டு.
கர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப அப்பியாச வரிசைகள் (ஸ்வராளி வரிசைகள்) மாயாமாளவகெளளை இராகத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. ஆனால் இந்துஸ்தானி சங்கீதத்தில் ஒவ்வொரு ராகத்திலும் பலடாஸ் என அழைக்கப்படும் சுவர அப்பியாச வரிசைகள் கற்பிக்கப்படுகின்றன.
‘கியால்’ மற்றும் ‘துருபாத்’ ஆகிய இரண்டும் இந்துஸ்தானிய இசையின் இரண்டு முதன்மை வடிவங்களாகும். எனினும் பல பிற மரபு ரீதியான மற்றும் பகுதியளவு மரபுசார்ந்த வடிவங்கள் உள்ளன. இந்துஸ்தானி இசையில் ஒரு டிரம் வகையான தபளா வாசிப்பவர்கள், வழக்கமாக காலத்தின் குறியீடான ரிதத்தை வைத்திருக்கின்றனர். மற்றொரு பொதுவான இசைக்கருவி கம்பிகட்டப்பட்ட தம்புரா ஆகும், இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் (ரீங்காரம்) இசைக்கப்படும். இந்த பணியை பாரம்பரியமாக தனியாகப் பாடுபவரின் மாணவர்கள் செய்கின்றனர். இது சலிப்படையவைக்கும் பணியாகத் தோன்றினாலும், உண்மையில், இதைப் பெறும் மாணவருக்கான வாய்ப்பு பெருமையானது மற்றும் அரிதானது. சாரங்கி மற்றும் ஆர்மோனியம் உள்ளிட்டவை பக்கவாத்தியத்திற்கான பிற இசைக்கருவிகள் ஆகும். மென்மையான காதல், இயற்கை மற்றும் பக்திப்பாடல்கள் ஆகியவை இந்துஸ்தானி இசையின் முதன்மைக் கருப்பொருள்களாகின்றன.
கச்சேரியானது வழக்கமாக ராகத்தின் மெதுவான விரிவுபடுத்தலுடன் தொடங்குகின்றது, இது பாதாத் என்று அறியப்படுகின்றது. இதன் கால வரம்பானது இசைக்கலைஞரின் பாணி மற்றும் முன்னுரிமையினைச் சார்ந்து நீண்ட நேரத்திலிருந்து (30–40 நிமிடங்கள்) மிகவும் குறைந்த நேரம் (2–3 நிமிடங்கள்) வரையில் நீடிக்கலாம். ராகம் நிலைநிறுத்தப்பட்டவுடன், சந்தமுள்ளதாக மாற பாடல் முறையைச் சுற்றிலும் இசை அலங்கரிப்பு தொடங்கி, மெதுவாக வேகமும் அதிகரிக்கின்றது. இந்தப் பிரிவானது ‘துருத்’ அல்லது ‘ஜோர்’ என்று அழைக்கப்படுகின்றது. இறுதியாக மோதுகை இசைக்கருவி வாசிப்பவர் சேர்ந்ததும் தாளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்துஸ்தானி இசையில் இசைக்கருவிகள் மற்றும் வழங்கல் பாணி இரண்டிலும் ஆர்வமுள்ள குறிப்பிடத்தக்க அளவிலான பெர்சியர்கள் உள்ளனர். மேலும் கர்நாடக இசை போன்றே இந்துஸ்தானிய இசையும் தன்னகத்தே பல்வேறு நாட்டுப்புற இசைகளையும் கொண்டுள்ளது.
இந்துஸ்தானிய இசை வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் தான்சேன் ஆவார். இவர் அக்பரின் அரசவையில் இரத்தினக் கல் போல் விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கர்நாடக சங்கீத வித்துவான்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தாளம் - லயம்

தாளம் என்ற சொல்லிற்குத் தட்டிவருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள். இசை சம்பந்தமாகப் பேசும்போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கின்றது. ஒரே அளவாகத் தாளத்தை தட்டிவரும்போது அதில் ஓர் இசையுணர்ச்சி உண்டாகின்றது. இது ‘லய’ உணர்ச்சி எனப்பெறும். எப்படி ஏழிசை சுரங்களெல்லாம் ஆதார சுருதியிலே சேர்ந்தொலிக்கும் போது ஓர் உணர்ச்சி உண்டாகின்றதே, அதேபோல தாளத்தையும் ஓர் அளவாய்த் தட்டிப் போட்டுவரும்போது அதுமாதிரியான உணர்ச்சி உண்டாகின்றது. ‘லயம்’ என்ற சொல்லிற்கு ஒன்றுதல் என்பது பொருள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Vanessa Mae & AR Rahman - Raaga's Dance song

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Nithyasree Mahadevan: Carnatic (S. Indian) Vocal Recital

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அகாரசாதகம்

உயிரெழுத்துகளாகிய ஆ, ஈ, ஊ, என்ற அகார, இகார, உகார உயிரினாலேயே சுரங்களைப் பாடுதல் வேண்டுமென்பது நம் மூதாதியினர்களின் கருத்தாகும். அதாவது ஒவ்வொருவரின் தொண்டையிலிருந்து வரும் உயிரொலியானது சுருதியோடு ஒன்றி ஆ- என்றோ, ஈ-என்றோ, ஊ-என்றோ எது பொருந்துமோ அதைக் கூறி, ஏழிசைகளையும் இயற்றுதல் வேண்டுமாம்.

விளக்கம் :-
ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ்
ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ
ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ
ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ
ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ
ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ

இவ்வாறு ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்று அகார, இகார, உகார முறையில் பாடும்போது, ஏழிசைகளும் இவ்வுயிர்களினால் தொடர்ந்து ஒலியோடு வரல்வேண்டும். இடைவெளிவிட்டுக் காணுதல் கூடாது.

இம்முறையைதான் “ அகாரசாதம்” எனக் கூறுகின்றனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இலக்கிய இலக்கணம் (இசை)

யானை, நாய், பூனை, கிளி, காக்கை, மயில் முதலிய உருவ பேதங்களைச் சிறு குழந்தைகளும் பகுத்து அறிகின்றனர். பின்பு அக்குழந்தைகள் எல்லோரும் பேசுவதிலிருந்தும் அவற்றின் வெவ்வேறு பெயர்களைத் தாமே அறிந்து கொள்கின்றனர். நாளடைவில் அவர்கள் செய்கை, குணம், உருவம் முதலியவற்றை எடுத்துக்கூறவும் முயலுகின்றார்கள்.

இவைபோல இசையுலகாவிய சங்கீத உலகத்தில் நிறப்பண்களின் (இராகங்களின்) விகற்பங்கள், பாட்டின் விகற்பங்கள், இசைக்கருவிகளின் ஒலிவிகற்பங்கள், அவற்றின் உருவம், அவற்றின் உருவம், அவற்றைத் திரும்பச் சொல்லும் திறமை முதலிய இவை, இயற்கையில் பல தடவை கேட்பதனால் அடைய பெறுகின்றன. இந்த அறிவு இலக்கிய அறிவு எனப்பெறும்.

யானைக்கும் பூனைக்கும் என்ன பேதம், ஆட்டிற்கும் மாட்டிற்கும் என்ன பேதம், குதிரைக்கும் கழுதைக்கும் என்ன பேதம், குரங்கிற்கும் மனிதனுக்கும் என்ன பேதம் என்பவற்றை நேரில் பார்த்துக் கவனித்து அறிந்தபடி அவற்றின் வேற்றுமையான அடையாளங்களை ஒருவன் எடுத்து விவரமாய் கூறுவதே இலக்கணப் பாடமாகும். இலக்கியமென்பது ஒன்றை மேற்பரப்பாய்ப் (ஸ்தூலமாய்) பார்த்து அறிவதைக் குறிக்கும் போது, இலக்கணமென்பது அதன் வெவ்வேறு பாகங்களின் அங்க அடையாளங்களை எடுத்துக் கூறுவதைஹ் குறிப்பதாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS