RSS

தமிழில் உள்ள இறை இசை வடிவங்களின் இலக்கணங்கள்

1. தேவாரம்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்திர மூர்த்தி நாயனார் ஆகிஅ 3 சைவ நாயன்மார்களால் இது இயற்றப்பட்டது. என்வே “ மூவர் தேவாரம்” என்று இப்பாடல் தொகுப்பை அழைப்பதுண்டு. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரும் கி.பி 7-ஆம் நூற்றாண்டிலும் சுந்தர மூர்த்தி நாயனார் கி.பி 9-ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்கள்.

தேவாரம் என்றால் தெய்வத்தன்மை வாய்ந்த பாடல் என்பது பொருள். இது இசைத்தமிழைச் சேர்ந்த முதனடை, வாரம், கூடை, திரள் என்னும் 4 வகைகளில் ஒன்றாகிய வாரம் என்ற பாடல் வகையைச் சேர்ந்தது. தேவாரப் பாடல்களைத் தேவாரப் பதிகங்கள் என்று சொல்வதுண்டு. மேலும் சம்பந்தர் பாடல்களைத் திருகடைக்காப்ப்ய் என்றும், நாவுக்கரசர் பாடல்கள் தேவாரம் என்றும், சுந்தரர் பாட்டு திருப்பாட்டு என்றும் வேறுப்படுத்தி அழைக்கப்படுகின்றன. மேலும் தெரிந்துகொள்ள முன் பதிவுச் செய்யப்பட்ட திருமுறை 12 ஐ பார்க்கலாம். அதில் அதிகமான விளக்கம் பெறலாம். இவை இசைவடிவத்துடனே இவர்கள் மூவர் வாக்கிலிருந்து தோன்றின. இவை செய்யுட்களாக இயற்றப்பட்டன.  தேவார பண்கள் சுரப்படுத்தி வைக்கப்படாமல் போயினும், குரு-சீடர் பரம்பரை மூலமாகவு, ஓதுவர்களீன் மூலமாகவும் அழியாமல் காப்பற்றப்பட்டுள்ளன. தறகாலத்தில் வழங்கும் பல ராகங்களுக்குத் தேவார பண்கள்  ஆதிலட்சியங்கள் என்பது ஆய்வாளர் முடிவு. இந்திய இசை வரலாற்றிலேயே நமக்குக் கிடைத்துள்ள இராகதாள அமைப்புடன் கூடிய இசை வடிவங்களில் மிகப் பழமையானது தேவாரம் என்பதும் அவர்கள் கூறும் உண்மையே.

2. நாலாயிரதிவ்விய பிரபந்தம் :

12 வைணவ ஆழ்வார்களால் இயற்றப்பட்ட 4000 பாசுரங்களுக்கு நாயிரதிவ்விய பிரபந்தம் என்று பெயர். ஆழ்வார்களின் பெயர்களை முன் பதிவுச் செய்யப்பட்ட திருமுறை 12 என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பன்னிருவரும் வெவ்வேறு எண்ணிக்கைக் கொண்ட பாசுரங்களை இயற்றிருப்பினும் அவை அனைத்தும் நாத முனிகளால் 10-வது நூற்றாண்டில் 4000 பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த பாடல்களை ஆழ்வார்கள் இறைவனை நோக்கி மிக உருக்கமுடனும் பாடினார்கள். வைணவ சம்பிரதாயத்தில் இந்த பாடற்தொகுப்பு வேதம் என்று போற்றுகின்றனர்.  தேவாரப் பண்களைப் போல் 4000 திவ்வியபிரபந்தங்களுக்கும் பண் இருந்திருக்கிறது. 4000 திவ்வியபிரபந்தம் ஆயிரம் ஆயிரமாக 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

3. காவடிச் சிந்து

காவடிச் சிந்து இசைப் பாவகைளில் ஒன்றாகிய சிந்து பாவகை வடிவங்களில் ஒன்று. இது இசைத்தமிழ் பாகுப்பாடுகளில் ஒன்று என்வும் கூறலாம். அது 5 உருப்புகளால் ஆன யாப்பு விசேடம். அவை பல்லவி, அனுப்பல்லவி, மூன்று கண்ணீகள் அடங்கிய சரணம் ஆகும். காவடிச் சிந்து பல்லவியும், அனுபல்லவியும், இன்றி சரணங்களுக்கு உரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். முருகளைப் பிராத்தணைச் செய்து காவடி எடுத்துச் செல்லுவோர் வழியில் துதிச் செய்து பாடும் பாடல்களே காவடிச் சிந்து என்ப்படுகின்றன.  இது காவடி ஆட்டத்திற்குப் பாடப்படும் இசைப் பாவகையாகும். தமிழ் நாட்டிலே பண்டைக்காலம் தொடக்கம் பேணப்பட்டு வரும் ஒரு நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே காவடிச் சிந்து எனலாம். முற்காலத்திலே முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகக் பால் எடுத்து வருபவர்கள் ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பொழுது அவர்களின் ஆட்டத்திற்குப் பாடப்படும் பாடல் வகைகளிலிருந்து இக்காவடிச் சிந்து என்ற பாவடிவம் தோன்றி உருவாகியது. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டி தான் காவடிச் சிந்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர்.
அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டம் சென்னிக்குளத்தில் பிறந்தார். காவடிச் சிந்து, வீரை தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், கோமதி அந்தாதி ஆகியவற்றை இயற்றினார். ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்ப தேவரால் ஆதரிக்கப்பட்டவர்.


தொடரும்.........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS