”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக்
கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக் கேட்கிறேன்”
என்று பலர் கூறுவதையும் செய்வதையும் நம் அனுபவம் பூர்வமாக தினசரி வாழ்வில் கேட்கிறோம்
பார்க்கிறோம். பிறந்ததிலிருந்து இறக்கும் வரை இசையுடன் வாழ்கிறான் மனிதன். பிறந்தவுடன்
தாலாட்டில் ஆரம்பித்து, இறந்தவுடன் ஒப்பாரியில் முடிகிறது மனிதனின் வாழ்க்கை. இடையில்
பலத்தரப்பட்ட இசையுடன் வாழ்வை நகர்த்துகிறான் மனிதன்.
இசை மிகவும் சக்தி வாய்ந்தது. உலகையே ஆட்டிப்படைக்கும் சக்தி
இசைக்கு உண்டு. இசையால் இறைவனையே அடையலாம் என்றும் பலர் கூறுவதைப் பார்த்திருக்கிறோம்.
எல்லா மதத்திலும், வழிப்பாட்டிலும் இசைக்கு ஓர் அங்கம் உண்டு.  இசை இறைவனையே கட்டி வைத்துவிடுமாம். 
மேலும், பல நோய்களைக் குணமாக்கும் சக்தி இசைக்கு இருப்பது ஆராய்ச்சிகளின்
மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 
”கர்நாடக இசையில் குறிப்பிட்ட சில ராகங்களையும் அது தொடர்பான
இசைக்கோர்வைகளைக் கேட்பதன் மூலம் நோய்களைக் குணமாக்க முடியும் என்று தமிழகத்தில் நடைபெற்ற
ஆய்வுகள் தெரிவித்தன. இத்தாலி நாட்டு விஞ்ஞானிகளும் இதை தங்களது ஆய்வுகள் மூலம் உறுதி
செய்துள்ளனர். இத்தாலியின் பாவியா நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்துகள் பிரிவு
பேராசிரியர் லுசியானோ பெர்னார்டி தலைமையில் இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றது. (http://tamil.webdunia.com)”
இசை கேட்கும் போது இருதய நோய் படிப்படியாக குணம் ஆகிறது. குறிப்பாக
மாரடைப்புக்குப் பிறகு நோயாளி குணமாக மெல்லிசைப் பெரிதும் உதவுகிறது. மன அழுத்தமும்,
விரக்தியில் இருப்பவர்களும் சில ராகங்களைக் கேட்பதன் மூலம் நாளடைவில் அவர்களது மனம்
அமைதி பெற வழி ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நல்ல இசை மனதையும், எண்ணங்களையும் அமைதிப்படுத்துகிறது. எனவே,
இரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம், தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற
நோய்கள் இசைமருத்துவத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மத்தளம், டிரம்ஸ்
போன்ற தோல் கருவிகள் மனக்கிளர்ச்சியை அதிகப்படுத்தி தசைநார்களைத் தளரச் செய்கிறது.
போர்க்களங்களிலும், தீமிதி சடங்குகளிலும், அலகு குத்திக் கொள்ளும் போதும் கொட்டுவாத்தியங்கள்,
தாரை, தம்பட்டை போன்ற தோல் கருவிகளைப் பயன்படுத்துவதால் மனக்கிளர்ச்சி ஏற்பட்டு உடலுக்கும்
உள்ளத்திற்கும் ஒரு புதிய வேகம் உண்டாகிறது
நோயாளிக்கு நோயின் கடுமையைத் தணிக்க மருந்து, சுகாதாரமான சூழல், இனிய இசை, அன்பான பணிவிடை ஆகியன தேவைப்படும். இது வளர்ந்த நாகரிகங் கொண்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்க வழக்க நடைமுறைகள். இவ்வாறான நடைமுறைகள் ஈராயிரம் ஆண்டின் முன்பே பழந்தமிழர் இல்லற ஒழுக்கங்களில் இரண்டறக் கலந்த ஒன்றாகக் காணப்படுகின்றன.
“ தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ” என்னும் புறநானூற்றுச் செய்யுள், விழுப்புண் கொண்ட போர்வீரன் கிடத்தப் பட்டிருக்கும் மனையின் இறைப்பில் இரவம்' வேம்பு ஆகிய இலைகளைச் செருகி, மனையெங்கும் வெண்ணிறங் கொண்ட சிறுகடுகைத் தூவி' நறுமணம் கமழும் நறும்புகை புகைத்து' யாழினால் பல்லிசை இசைத்தும் ஆம்பல் என்னும் குழலை ஊதியும் காஞ்சிப் பண்ணைப் பாடியும் மருத்துவம் செய்தனர்.
வரிப்புலி மார்பைக் கிழித்தது போல், போர்க்களத்தில் ஏற்பட்ட விழுப்புண்ணை ஆற்றுதற்குக் கொடிச்சியர் இசைப்பாடலை இசைத்தனர் என்று மலைபடுகடாம் உரைக்கின்றது.
இதனால் மனையிலுள்ள நோயாளரைப் பேணும் மருத்துவர்களாகப் பெண்டிரும் இருந்துள்ளனர் என்பதும், நோயின் கடுமையைப் போக்க நோய்த் தடுப்பும் சுகாதாரமும் தேவை என்பதும், அறியப் பட்டிருந்தது. இசையால் நோயைத் தணிக்கும் இசைமருத்துவம்
(Musico therapy) என்னும் முறையும் நடைமுறையில் இருந்திருப்பதும் தெரியவருகிறது. (http://www.thamizhkkuil.net)
இசையில் நல்ல ஆழ்ந்த அறிவுள்ள
அலோபதி டாக்டர்கள், இசை மருத்துவத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அமிர்தவர்ஷினி
ராகம் மழையை வரவழைக்கும் தன்மை கொண்டது என நம்பப் படுகிறது. இந்த ராகம் உடலைக் குளிர்விக்கும்
தன்மை கொண்டது என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. தண்ணீரோடு தொடர்புடைய ராகமாக இருப்பதால்,
சிறுநீரகப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வாக இந்த ராகம் உள்ளது. தவிர மனம் சார்ந்த
பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஹம்சத்வனி, பீம்பிளாஸ், இருதய நோய்களைக் குணப்படுத்த சந்திர
கவுன்ஸ், மன அழுத்தத்தினால் ஏற்படும் நீரழிவைக் கட்டுப்படுத்த பகாடி, ஜகன் மோகினி என
மியூசிக் தெரபியில் ராகங்கள் பட்டியலிடப்படுகின்றன.
      மேலும் கர்நாடக
சங்கீதத்தில் சொல்லப்படும் இராகங்களின் மூலம் பலதரப்பட்ட நோய்களைக் குணப்படுத்தமுடியும்.
மேலும், இராகங்கள் பல உணர்ச்சிகளையும் தோன்ற வல்லது. 
சிந்து
  பைரவி, ரீதிகௌளை 
 | 
  
கருணை 
 | 
 
முகாரி,
  ரேவதி, சிவரஞ்சனி 
 | 
  
சோகம் 
 | 
 
ஹம்சத்வனி 
 | 
  
வீரம் 
 | 
 
மத்தியமாவதி,
  சஹானா 
 | 
  
மன
  அமைதி 
 | 
 
கானடா,
  பாகேஸ்ஸ்ரீ 
 | 
  
பக்தி 
 | 
 
நீலாம்பரி 
 | 
  
தாலாட்டு
  (தூக்கம் வர) 
 | 
 
கரகரப்பிரியா 
 | 
  
மன
  உறுதி, மன அமைதி 
 | 
 
சிவரஞ்சனி 
 | 
  
Intellectual
  excellent  
 | 
 
புன்னாகவராளி,
  சஹானா 
 | 
  
அதீத
  ஆத்திரத்தைப் போக்கும்,  
 | 
 
இங்கு சில இராகங்களும் குணப்படுத்தக்கூடிய நோய்களும் கீழ்கண்டவாறு
::
இராகம் 
 | 
  
நோய்கள் 
 | 
 
பைரவி் 
 | 
  
ஆஸ்துமா,
  சுவாசம் சம்பந்தமான நோய்கள், T.B, புற்றுநோய்,  
 | 
 
ஹிந்தோளம் 
 | 
  
வாதம்,
  low blood pressure 
 | 
 
சாரங்கா 
 | 
  
பித்தம் 
 | 
 
பிலஹரி,
  தர்பாரி 
 | 
  
மன
  அழுத்தம் 
 | 
 
ஆகிர்பைரவி,
  தோடி 
 | 
  
High
  blood pressure 
 | 
 
பாகேஸ்ஸ்ரீ,
  தர்பாரி 
 | 
  
Insomnia,
  தூக்கம் வராமை 
 | 
 
தோடி 
 | 
  
தலைவலி,
  anxiety  
 | 
 
ஆகிர்பயிரவி 
 | 
  
அஜீரணம் 
 | 
 






2 comments:
உண்மை இசையின்றி எதுவிமில்லை
வலைச்சரத்தின் மூலம் தொடர்கிறேன்
மிக அருமை 💐💐💐
கருத்துரையிடுக