RSS

தமிழிசை (தமிழும் இசையும்)

கர்நாடக இசையென்று இப்பொழுது கூறப்படுகின்ற தமிழிசைக்கு வடமொழி நூலாகிய சங்கீத இரத்தினாகரம் என்ற நூலே இலக்கண நூலாகக் கருதப்பெற்று வருகின்றது. ஆனால் உண்மையில் நம் நாட்டு இசையிலக்கணச் செம்பாகங்கள் சிலப்பதிகாரத்திற் காணப்பெறும் ஒவ்வொரு கதையினுள்ளும் இரத்தனமணிபோல நுட்பமாக பொதிந்துள்ளன --(மகா வித்வான் வா.சு கோமதி சங்கர் ஐயர்)--
இசையென்பது தமிழன் பண்பாட்டில் சிறப்பு வாய்ந்த கலையாகும். இக்கலை முழுக்க முழுக்க ஒலி உருவினாலாய கலவையே ஆகும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த ஒரு கலையை முதன்முதலாகக் கண்டவர்கள் நம் தமிழரே ஆவர். இசைக்கலையின் சிகர்மாக விளங்குவது நிறமென்ற இராகமே ஆகும். இவ்வாறான நிறத்தை ஆளத்தி செய்வது என்பது தமிழிசையில் மட்டுமே. இவ்வழக்கு வேறு எந்த நாட்டின் இசைக்கலையிலுமே இல்லை. இத்துணை மாண்பு பெற்று அமைந்துள்ள இசைக்கலைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக உரைக்கப்படும் சிலப்பதிகாரம் என்ற நூலே இலக்கண நூலாக இப்போது மதிக்கப் பெறுகின்றது. அது காப்பிய இலக்கியமாக மட்டுமின்றி இசைக்குறிய இலக்கண நூல்தானென்று மதித்து ஏற்றுகொள்ளுதல் வேண்டும் (இசைத்தமிழ் இலக்கண விளக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
     அடுத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த வடமொழி நூலாகிய சங்கீத இரத்தினாகரம் இசையிலக்கணத்தைச் செம்மையாகக் கூறும் நூலாக மதிக்கப்பெறுகின்றது.  சங்கீத இரத்தினாகரத்தை உற்று நோக்கினால் சிலப்பதிகாரத்தில் கூறப்பெற்றுள்ள இசைநுட்ப பகுதிகளே அங்கு வடமொழியில் வரப்பெறுதலைக் காணலாம். எனவே இவ்விரு நூல்களிலும் கூறப்பெறு இசைச் செய்துகள் தான் இசையின் இலக்கணத்தை ஒன்றுபடுத்திக் காட்டுகின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

படங்களுடன் பதிவும் மிக அருமை
நீளம் கருதி சட்டென முடித்துவிட்டார்போல்
ஒரு எண்ணம் தோன்றியதை தவிர்க்க இயலவில்லை
நல்ல பதிவு
அதிக இடைவெளியின்றி
பதிவைத் தொடர வாழ்த்துக்கள்

kumaresan சொன்னது…

இப்படி சிறு சிறு கட்டுரைகளாக தமிழிசையின் தடங்களைப் பதிவு செய்து வருக. தமிழ் மக்களின் தொன்மைச்சிற்ப்பு மிக்க நாட்டுப்புற இசை, நவீன திரைப்பட இசை, இடையில் தடம் மாற்றப்பட்டு க்ர்நாடக இசை மேலோங்கிய நிலை, கர்நாடக இசை ராகத்தில் தமிழ்மொழிப்பாடலைப் பாடுவதே தமிழிசை என்று மாற்றப்பட்ட கதை போன்றவற்றையும் வெளிக்கொணர்க. வாழ்த்துகள்.