RSS

கரகம், மகுடாட்டம், ஒயிலாட்டம்


 -> கரகம், சக்தி கரகம், ஆட்டக்கரகம் என இரு வகைப்படும். உடுக்கை, குடம், தாளம், கட்டை, பம்பை, உறுமி, தக்கை, துந்துபி, ஆகிய எட்டும் 
வில்லுப்பாட்டின் பக்க வாத்தியக் கருவிகளாகும்.




-> மகுடம் என்ற தோல் கருவியை அடித்து ஆடப்படுவது மகுடாட்டம். கோல்களை அடித்து ஆடுவது கோலாட்டம்.



-> ஆண்கள் மட்டுமே நிகழ்த்தும் நாட்டுப்புற ஆட்டக்கலை ஒயிலாட்டம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழா


தமிழ் மகனே கேளடா
தலைவணங்கா தமிழன் நீயடா
தங்க தமிழா கேளடா
தாய்மொழி மறந்த்து ஏனடா?

தரனியை வென்றவன் நீயடா- சிலர்
தரங்கொட்டு போனது ஏனடா?
பல திசைகள் கண்டவன் நீயடா
பாரினில் வாழத்தவிப்பது ஏனடா?

விண்வெளியை அறிந்தவன் நீயடா
வீண்கவலைக் கொள்வது ஏனடா?
கலைகளைக் கண்டவன் நீயடா- அவை
களவு போனது ஏனடா?

உலகில் மூத்தவன் நீயடா
உன்பெருமை மறந்த்து ஏனடா?
நாகரீகம் அறிந்தவன் நீயடா
நிலைமாறி கிடப்பது ஏனடா?


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இசை IQ




இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும். அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவது தான் இசை என்று கூறுகின்றோம். நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்று தான் நமது காதுகளும் ஒலியை செயலாக்கம் செய்கின்றன. உண்மை சொல்லப்போனால் நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். என்ன புரியவில்லையா…? நாம் நமது தாயின் கருப்பையில் இருந்த போது, நமது கண்களால் ஒன்றுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால், நாம் நமது காதுகளால் எப்போதுமே இசையைக் ரசித்துக்கொண்டு இருந்தோம். அது வேறு ஒன்றுமே இல்லை, நமது தாயின் இதயத்துடிப்பு தான். எப்போதுமே நமக்கு தாலாட்டுப் போல் அந்த இதயத் துடிப்பின் இசையில் நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

இசையில் இன்னும் ஓர் மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது! சிறுவர்களின் வளர்ச்சி நேரம் இசை அவர்களின் மூளை விருத்தியை தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள். அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள். எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள விடுங்கள்! அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன!

நன்றி[ Arivu Dose.com - அறிவு டோஸ்]



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இசை அறிவியல்




மனித உடலில் இருக்கும் ஓர் சுவாரசியமான குணம் என்னவென்று தெரியுமா? உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள் எமது உடலுக்குள் நடைபெறும்போது எமது மூளை மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறது. உதாரணத்திற்கு பசிக்கும் போது நாம் தேவைக்கு ஏற்ற மாதிரி உணவு அருந்திவிட்டதும் எமது பசி தீர்ந்துவிட்டு, உடனடியாக சந்தோஷமும் திருப்தியும் அடைந்து விடுகின்றோம். ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது என்றால் டோபமைன் (dopamine) எனப்படும் வேதியியல் பொருள் எமது மூளைக்குள் வெளியிடப்படுகிறது. இது நரம்புக்கடத்தியாக (neurotransmitter) பணிபுரிந்து இந்த சந்தோஷமும் திருப்தியும் கலந்த உடல்நிலைக்குக் காரணமாக இருக்கிறது.

இதேபோன்று தான் போதைப்பொருட்கள் பாவிக்கும் வேளையில் டோபாமைன் வெளியிடப்பட்டு நாம் வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. நமது உடலில் அந்த போதைப்பொருள் குறையும்போது டோபாமைன் வெளியிடுவதும் நிறுத்தப்படுகிறது. எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக மேலும் அந்த போதைப்பொருளை உள்வாங்க வேண்டியதாகிவிடும். அத்துடன் எமது உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை ஆகி விடுகிறது. இதில் சுவாரசியமான விடயம் என்ன தெரியுமா…? நாம் இசையை ரசிக்கும் போது நமது உடலில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்து நமது மூளையில் உள்ள பல்வேறு பகுதிகள் இயங்கத் தொடங்கிவிடுகின்றன. இசை, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும், அதை ரசிக்கும் போது நமது மூளையில் டோபாமைன் வெளியிடப்படுகிறது. அதன் விளைவு என்னவென்று உங்களுக்கு இப்போ தெரியும். நாம் மகிழ்ச்சி கலந்த திருப்தி நிலையை அடைந்து விடுகின்றோம். இன்று வரை அதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துவிடவில்லை.

போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக நம்மை அடிமை ஆக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் இசை சுவை வித்தியாசமாக இருந்தாலும் அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறது. டோபாமைன் வெளியிடுவது மட்டும் அல்லாமல் இசை கேட்கும் போது எமது உடலில் மேலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக எமது உடலில் எல்லாமே ஒரு தாளத்திற்கு அடங்கியதாகத் தான் இருக்கிறது. நமது இருதயம் துடிப்பது ஓர் தாளத்தில். நாம் சுவாசிக்கும் போது பிராணவாயு உள்வாங்கி கரியமிலவாயு வெளியேற்றுவது இன்னும் ஓர் தாளம். கடினமான வேலை செய்யும் போது இருதய துடிப்பு மற்றும் சுவாசத்தின் தாளம் அதிகரித்துவிடுகிறது.

அதே போன்று தான் நாம் இசை கேட்கும் போதும் இந்த தாளங்கள் மாறிவிடுகின்றன. அதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் மூளையின் செயல்பாடும் மாறிவிடுகின்றது. பொதுவாக நமது இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் துடிக்கின்றது. இந்த துடிப்பை 72 Beats per Minute (BPM) என்று சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும் BPM ஊடாக அளப்பர். ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால் இசையின் தாளம் பொறுத்து நமது உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை உணர்கின்றது என்பது தான். 72 BPMகு அதிகமாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், அதுவே 72 BPMகு குறைவாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் அமைதி ஆகி விடுகிறோம். உதாரணத்திற்கு அம்மாவின் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ ஏறத்தாழ 200 BPM, அப்பாவின் „வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே“ 80 BPM, மற்றும் இளைஞனின் „விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே“ ஏறத்தாழ 91 BPM கொண்ட பாடல்களாக அமைந்து உள்ளன.

நன்றி [Arivu Dose.com - அறிவு டோஸ்]

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இசைப்பாடும் தும்பி













” கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப்
பொங்கர் வண்டினம் நல்யாழ் செய்ய
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்
விரைப் பூம்பந்தர்”

இப்பாடலடிகள் ஐம்பெருங்காப்பியமான மணிமேகலை எனும் நூலில் உள்ளன. வண்டினுள் உயர்ந்த சாதியாகிய தும்பி என்னும் வண்டு குழலூத, வண்டினம் யாழ் இசைக்க, குயில் பாடலைப் பாட, மயில் ஆடுகின்ற சோலை என்று கூறப்பட்டுள்ளது

இவ்வடிகள் சோலைக் காட்சியைச் சித்தரிப்பனவாகும். ஆனால், குறிப்பாக இசை தோன்றிய வகையையும், இசைக்கருவி தோன்றிய முறையினையும் உணர்த்துகின்றன. குயிலின் இனிய குரலைக்கேட்டு மனிதன் இசை இசைக்கத் தொடங்கினான் என்ற கருத்தை, “குயில் பாட” என்பது தெளிய வைக்கின்றது. ஆதியில் குயில் பாடியதைக் கேட்டு மனிதன் பாடினான். அதனையே மரபாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் ஈண்டு இவ்வாறு கூறியுள்ளார் என்பது விளங்கும்.

மலையிடை நின்ற மூங்கிலில் வண்டுகள் துளைத்தத் துளைகளினின்று வெளிப்பட்ட இனிய ஓசையைக் கேட்டே, மனிதன் துளைக்கருவியாகிய குழல் தயாரித்தான் என்ற உண்மையை உணர்த்தும் வகையில் சாத்தனார் இவ்வாறு கூறினார் என்பது தெளிவாகும்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் சோறு போடுமா?

(தலைப்பை கிளிக் செய்து முழுமையாக படியுங்கள்)

தமிழ் சோறு போடுமா?
இல்லை!!!
உட்கார வைத்து வடைப் பாயாசம் பீட்சா, கேஎப்சியுடன் விருந்தே வைக்கும்...
தமிழை நன்கு படித்து அறிந்தவன் இந்த கேள்வியைக் கேட்பதில்லை.... தமிழைப் படிக்காமலேயே இந்த முட்டாள் தனமான கேள்வியை எதுக்குங்க கேட்கிறிங்க,....
தமிழைப் படித்து பாருங்கள்... தமிழ்ச்சாற்றை அருந்தி பாருங்கள்.... இதுப்போன்ற கேள்வி தோன்றாது... மீறி தோன்றினால் குறை தமிழ் மீது அல்ல... உங்கள் மீதுதான்!!!!!!
சில தமிழர்களைத் தவிர வேறு எந்த இனத்தவரும் தங்கள் தாய்மொழியைப் பார்த்து இப்படி கேட்பதில்லை.... ஆறு அறிவு இருக்கிறது என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக்கொண்டால் மட்டும் போதாது.... அதற்கோற்ப நடந்து கொள்ளல் அவசியம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இசையும் தமிழில் இசைந்தது


(தலைப்பை கிளிக் செய்து முழுமையாக படியுங்கள்)


சங்கீதம், கர்நாடக சங்கீதம் இப்படி எதை நாம் பயில முற்பட்டாலும் அதன் பயணம் தியாகராயர், முத்துசாமி தீக்ஷிதர், ஷாமா சாஸ்திரிகள் போன்றோரின் தெலுங்கு கீர்த்தனைகளில் தான் இருக்கும்
ஆனால் 19ஆம் நூற்றாண்டில் கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி கெ சி, ராஜாஜி ராஜா சார் முத்தையா செட்டியார் போன்றோர் கொண்ட முயற்சிகள் இன்றளவும் வெற்றி பெறவில்லை என்பதை காட்டும் வகையில் மரபு இசை மேடைகள் அங்கிகாரம் கொடுக்கப்படவில்லை என்பதை கண்டால்
ஆனால் இன்றைய தலைமுறைகள் இந்த நிலையை மாற்றி அமைக்கிறது தமிழ் பாடல்கள் ராகங்களின் அடிப்படையில் மரபு மேடை ஏறுகிறது. மிகவும் குறைவான முந்தைய தலைமுறையினர் மட்டுமே இந்த கோட்பாடு கொண்டு இன்றும் உள்ளனர்.
இசை என்பது மொழி மரபு போன்றவற்றை கடந்தது. நாம் உணர்ந்து ரசிக்கவல்ல தாய்மொழியில் பாடல்கள் தோன்றினால் தத்தம் மொழியினருக்கு ஒரு இன்பம் தோன்றும். இசையில் பாகுபாடு ராகங்களால் இருக்கலாம் மொழியால் கூடாது என்பதை தற்போதைய தலைமுறை விதைத்து வருகிறது
இசையில் இசைவோம் உணர்ந்து இசைவோம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Tamilans are the great musicians.... ( ancient tamil music)

The music of the pre-Christian era, namely, the Sangam period is called Tamil music. This period ranges approximately between 300 BC and 3 AD. Tamil music is considered one of the most ancient music systems in the world. This is a very special system of music, characteristic and specific to the Tamil people. The historical references to the structure of music, musical instruments, method of singing, the circumstances under which the music developed, etc have been cited in very ancient texts

carnatic music today revolves around the celebrated trinity, Tyagaraja, Dikshitar and Syamasastri. In Tamil Nadu, Tamil isai also has a phenomenal growth. Then one may question as to whether these two are different ones. the deep researches came to the conclusion that these are one and the same.

It is generally said that music came from sama veda. Similarly in Tamil tradition, musical texts are available right from the first sangam period. Works which are meant for singing had the name “paadal”. Lot of musical references are found in tamil poetic works(literature) like Tolkappiyam, Silappadikaram etc.

Silappadikaram gives a lot of information about music and dance. There are eleven types of dances mentioned in the chapter, Arangerru kaadai, explaining the maiden performance of the dancer Madhavi. In the same chapter the qualities that a yazh player, flute player and the drummer should possess are explained in detail under the headings, Yazacirian amaidi, Kuzalasirian amaidi and Tannumai asirian amaidi. The names of the seven svaras [sa (satjam), ri (rishabam), ga (gaantharam), ma (matiyamam), pa (panjamam), da (daivatam, ni (nishatam)] are mentioned as kural (sa), tuttam (ri), kaikkilai (ga), uzai (ma), ili (pa), vilari (da) and taram (ni).

tholkapiyam is written by Tolkappiar, he gives references to the music that prevailed about 2000 years ago, besides dealing with the life of the early Tamilians, their customs, social and political conditions and the physical and geographical particulars. From tholkapiyam, v can understand that the country was divided into four main regions - Kurinji (hills), Marudam (arable lands), Mullai (pastoral regions) and Neithal (coastal belts). Palai (desert) was also added. Each region had its own food, occupation, Gods, music and so on. As mentioned earlier, each region also had a mode or Pann, melodic instrument or Yazh and percussion instrument or Parai.
Instruments like Kuzhal (Flute), Yazh (Vina / Harp) and Muzhavu (percussion) seem to have been the accompaniments for both music and dance.

Many such references to music are found in Tamil treatises. But we are yet to find out as to how music was sung are played in those days. The earliest reference to this can be found in Tevarams. Thanks to the oduvar tradition, the tevarams are sung today as they were composed and sung by the "samaya kuravargal", Tirunyanasambandar , Manikkavasagar, Tirunavukkarasar and Sundaramurti nayanar. nyanasambandar is the youngest composer in the world. He composed his first hymn at the age of three. His first song is “Todudaiya seviyan” in the Pan Nattapadai. This corresponds to the raga “Gambhiranattai”, according to the pan research done by the Tamil Isai Sangam, Chennai. M.Arunachalam in his book “Musical Tradition of Tamil Nadu” mentions that Karaikkal Ammai has composed her “Mutta tiruppadigam” in Nattapadai and Indalam which are still sung in those pans. Ammai’s padigams are sung in praise of the Lord of Tirualangadu (sivan).

We certainly get authentic musical settings from Tevaram 7th to 8th century. This is possible due to the othuvar tradition, which is still prevalent. “Othutal”, in Tamil language means telling in the ear. Tevaram music is preserved because of teaching them and passing them on to the next generation. They were not notated and written. But it is a really rich legacy that is given to the generation that followed



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிவ பூஜையில் கரடி(கை)...



l

(தலைப்பை கிளிக் செய்து முழுமையாக படியுங்கள்)

சிவ பூஜையில் கரடி(கை)...

கரடிகை என்பது நம் இலக்கியங்களில் இடம்பெரும் ஒருவகைத் தோற்கருவி. கரடி கத்தினாற்போல் ஓசை உடையதாம். இந்த ஓசை காரணம்பற்றியே இந்தக் கருவி கரடிகை என்னும் பெயர் பெற்றது என்று கூறுகிறார் அடியார்க்கு நல்லார். 

கரடிகை அளவு கருவியாகிய மரக்கால் போன்று அமைப்புக் கொண்டது. இசை நூலில் இந்தக் கருவி சமக்கருவி என்ற வகையின் பாற்படுகிறது. வேறு வகையான பிரிவில் தலைக்கருவியாகிறது. அக முழவு வகையைச் சார்ந்தது. பிரம்மன், ருத்திரன், விஷ்ணு என்ற கடவுளர் மூவர்க்கும் இயற்றப்படுவனவாகக் கூறப்படும் கருவிகளுள் கரடிகை என்ற இந்தத் தோற்கருவியும் ஒன்று.

கரடிகை பலாமரத்தால் செய்யப்படும். கனகரடிகை எனக் கூறி, கீழ்க்காணும் அளவுகள் கூறப்படுகின்றன.

சிவ பூஜையில் கரடி என்று சொல்வது கரடி(மிருகத்தை) குறிப்பதல்ல... கரடிகை என்ற வாத்தியம் தான் சரி... 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குமரிக்கண்டத்து இசை


உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே. உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே. தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது. 

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.


பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்.

--இசையியல் (ச. மெய்யப்பன் எம்.ஏ அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மணிவாசகர் பதிப்பகம்)--

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யாழ்

முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் ஆகும். தமிழர்கள் இசையோடு ஒன்றியவர்கள் என்றால் அது மிகையாகாது. இசையில் தனி முத்திரைப்பதித்தவர்கள் தமிழர்கள். தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் இசையைக் கண்டவர்கள் தமிழர்கள். பல இசைக்கருவிகளையும் தோற்றுவித்தனர். இன்று வழக்கில் இல்லாத பல வகையான இசைக்கருவிகள் இலக்கியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன். அவ்வகையில் தந்தி இசைக்கருவியான யாழ் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகள் பூட்டப்பட்டவை நரம்புக் கருவிகளாகும். அவை யாழ், வீணை, தம்புரா, கோட்டுவாத்தியம், பிடில் (வயலின்) முதலியனவாம். இதில் யாழ் மிகவும் பழமையான இசைக்கருவியாகும்.
இவ்விசைக்கருவியை "fairy tale" கார்டோன்களிலும் பழைய ஆங்கில படங்களிலும் அதிகம் காணலாம். வழக்கத்தில் இவ்விசைக்கருவியைக் கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்று பலர் கருதுகின்றனர். யாழ் தமிழன் கண்ட இசைக்கருவி என்ற உண்மை நம்மில் பலருக்குத் தெரியாமலே உள்ளது.
பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற இசைக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். ஆங்கிலத்தில் யாழ் இசைக்கருவியை ஹார்ப் (harp) என்று அழைப்பர். இன்னும் அவர்களிடையே நவீன யாழாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மறந்துவிட்ட இசைக்கருவியாக யாழ் திகழ்கின்றது.  இன்று இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை முதன்மையிடம் வகிக்கிறது.
தமிழர் கண்டு வாசித்த முதல் நரம்பு இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு யாழ் ஒர் அடிப்படைக் காரணமாகும். தமிழுக்கென்று சிறப்பான எழுத்து “ழ்”. “யாழ்” என்ற சொல்லில் ”ழ்” தாங்கி வருவதிலேயே தெரிகின்றது யாழ் தமிழுக்குரிய இசைக்கருவி என்று.  
யாழின் வகைகள் பல. அவை பேரியாழ் (21 நரம்புகளை உடையது)  மகரயாழ் (17 நரம்புகளை உடையது)  சகோடயாழ் (16 நரம்புகளை உடையது) செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது) இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. மேலும், யாழ் நூலில் கூறப்படும் யாழ்கள், வில் யாழ் , சீறி யாழ், செங்கோட்டியாழ், பேரி யாழ், சகோட யாழ், மகர வேல்கொடி யாழ் , மகர யாழ் / காமன் கொடி யாழ் மற்றும், மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்
வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். அந்த வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் யாழ் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை அதாவது குரலிசை, நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். இந்த பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். பண்டைக்காலத்தில், தந்தி கருவியான யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.
மேலும், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் அமைப்புகள் தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.
சிலப்பதிகரம் தமிழிசையைப் பற்றி தெளிவாக விளக்கும் தமிழிசை நூலாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
சீவக சிந்தாமணி எனும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இலக்கிய நூலிலும் யாழ் பற்றி பேசப்பட்டிருக்கிறது. காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. பருந்து பறக்கும் பொழுது நிழல் அதனைத் தொடர்வது போன்று மிடற்றிசையும் , யாழிசையும் இணைந்து இருத்தல் வேண்டும் என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார். இவர் கையில் இருந்தது 14 தந்திகளைக் கொண்ட சகோட யாழ். இதுப் போன்று பக்தி இலக்கியங்களிலும் யாழின் பயன்பாடு அதிகமாகவே காணப்படுகின்றன.
மகர யாழ் 17 அல்லது 19 தந்திகளைக் கொண்டது. இது மகர்மீனின் உருவம் உடையதாகையால் இப்பெயர் பெற்றதாம். அழகிய இந்த யாழ் யவனத் தச்சர்களால் செய்யப்பெற்றது என்று உதயன காவியம் உரைக்கின்றது.
பொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை ஒன்று காணப்படுகிறது. அதி அற்புதமான வர்ணனையாகவும் கருதப்படுகின்றது. ஒப்பனைச் செய்யப்பட்ட மணமகளின் அழகிய தோற்றம் போலக் காட்சியளிக்கிறது யாழ் என்கிறார் பொருநராற்றுப் படை இயற்றிய புலவர். இத்தகைய யாழை மீட்டி பாணர்கள் இசையைப் பொழியும் போது, அதன் இசையில் மயங்காதவர்கள் எவரும் இல்லை என்கிறார். வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட இந்த இசையைக் கேட்டதும், தங்களது கொலை, கொள்ளை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்களாம். தங்களது கையில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக்கூட இசையில் மயங்கிக் கீழே போட்டு விடுவார்கள் என்கிறார் புலவர்
கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கல்லாடம் அகப்பொருள் நூலாகும். கல்லாடத்தில் நாரதப்பேரியாழ், தும்புருயாழ், கீசகயாழ், தேவயாழ் என்று நான்கு வகை யாழ்கள் பற்றிய செய்திகள் உள. நாரதப் பேரியாழ் 1000 நரம்புகளைக் கொண்டது. தும்புருயாழ் 9 நரம்புகளையும், கீசக யாழ் 100 நரம்புகளையும் கொண்டுள்ளது என்கிறது.
மேலும், சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம், திருமங்கலம் கோயில்களிலும், பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், யாழ் குறித்தான பல சிற்பங்களைப் பார்க்கலாம். (இந்த சிற்பங்களின் புகைப்படங்கள் இணையத்தில் காணலாம்)
கொங்குவேளிர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது பெருங்கதை என்ற காப்பியம். இதில் யாழ், வீணை, குழல், வளை, வயிர் ஆகிய ஐந்து பண்ணிசைக் கருவிகளாகும். பறை, முழவு, முரசு, தண்ணுமை, தடாரி, குடமுழா, பாண்டில் ஆகிய ஏழு தாளக் கருவிகளும் மனிதக் குரலும் இசையெழு தளங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. (தமிழர் இசை பக்கம். 263). யாழ்நூல், நாரதகீதக்கேள்வி ஆகிய இசை நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. ‘கேள்வி’ என்ற சொல் யாழ் கருவியையும், இசை நூலையும் குறிக்கும். இசைப்பயிற்சி பெறுவோர் இத்தகைய நூற்களைக் கற்றுத்தேற வேண்டும் என்கிறது. யாழும் பாடலும் வேறுபாடின்றி ஒத்து இயங்குதல் வேண்டும். பண்ணிசை விதிகளை நன்கு அறிந்த குற்றமற்ற கேள்வியறிவு உடையவர்களே சிறந்த இசை வல்லுநர் ஆவார் என்கிறது பெருங்கதை.
யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது
ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் 1947 இல் ”யாழ் நூல்” என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.
யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம். யாழ் மட்டுமல்ல இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே. அடியேனின் தாழ்மையான அன்பான வேண்டுகோள். திரிந்து புதைந்த நம் தமிழ் இசையை மீண்டும் தோண்டுவோம். தோண்டி மீட்போம்.

மேற்கோள்
·         http://ta.wikipedia.org/wiki/
·         http://www.varalaaru.com/
·         www.tamilvu.org
·         இசையின் ஈர இயக்கங்கள் /facebook
·         இசைத்தமிழ் இலக்கண விளக்கம், வா. சு. கோமதி சங்கர் ஐயர்
·         தென்னக இசையில், பி.டி செல்லத்துரை
·         சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம், சுஜாதா
·         தினம் ஒரு திருமுறை தேன் பதிகம், பால. இரத்தினவேலன்
·         இசையியல், ச. மெய்யப்பன் எம், ஏ, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
·         Music in Cilappatikaram, Dr. S. Ramanathan, Madurai Kamaraj University

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS