RSS

இசை நூல்கள் (காவிய நூல்கள்)

சிலப்பதிகாரம் என்னும் காவியத்துள் கூறப்பெறும் இசைப்பற்றிய செய்திகளையும், இசைகளையும், இசைக் கருவிகளையும் நோக்குங்கால், அதனை ஓர் இசைக் களஞ்சியம் என்றே கூறவேண்டும். இசை வகையும், இசைத் துறையில் ஈடுபடும் கலைஞர் நிலைகளையும், இசைக் கருவிகளையும், இசையை மக்கள் தமது வாழ்வில் கொண்டிருந்த வகையினையும் விவரித்துரைக்கின்றது.

மணிமேகலை என்னும் காவியத்துள் இசைப்பாடும் காட்சிகளும், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

சீவக சிந்தாமணி என்னும் காவியத்துள், இசைக் கருவிகள் பற்றிய பல செய்திகள் கூறப்பெற்றுள்ளன. காவியத்தின் தலைவர்கள் இசைத் தேர்ச்சியும் இசை வாழ்க்கையும் கொண்டுள்ளனர். இசைப் போட்டியும் நடைப்பெற்றுள்ளது.

பெருங்கதை என்னும் காவியத்துள்ளும் இசைக் கருவியாகிய யாழின் இன்னிசையை விரித்துரைக்கப் பெற்றுள்ளது. காவியத் தலைவனான உதயணன், யாழினைக் கொண்டு இன்னிசை இசைத்து மதவெறி கொண்ட யானையையும் அடிப்பணியச் செய்தான்.

கல்லாடம், என்னும் நூலினுள்ளும் இசைப் பற்றிய செய்திகளும், இசைக்கருவிகள் பற்றிய செய்திகளும் கூறப்பெற்றுள்ளன. 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கள்வர் மயங்குவர்

கள்வரும் இசையின் இனிமையால் தம் தொழிலைச் செய்யாது மயங்கி நின்றுவிடுவர். பாலைநிலத்து கள்வர், வழிவருவோர் பொருள்களையும் உயிரையும் கவர்வர்; பொருள் இல்லையெனில் வழிவந்தோரைக் கொன்று, அவருடைய உடல் துள்ளுவதைக் கண்டு களிப்பர். அத்தகைய கொடிய கள்வர் எதிர்ப்படின், அவ்வழியாகச் செல்லும் கூத்தர் முதலியோர் பாலைப் பண்ணை இனிமையாக பாடுவர். கள்வர், அவர் இசையில் ஈடுப்பட்டு இன்புற்று தம் கொலைக்கருவிகளையும் நழுவவிட்டுத் தமது தொழிலையும் மறந்து மயங்கி நின்றுவிடுவர்.

இச்செய்தியை,
“ஆறலை கள்வர் படைவிட அருளினன்
மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை.”

என்ற பொருநராற்றுப் படையில் கூறப்பட்டுள்ளது.
‘வழிப்பறிக்காரர்களாகிய கள்வர்கள் படைகளைக் கைவிடும்படியாக அவர்களிடம் இருந்த அருளுக்கு மாறுபட்டதான கொடுமையை மாற்றுகின்ற கேட்பதற்கினிய பாலைப்பண்” என்பது இவ்வடிகளின் பொருள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS