பண்டைத்
தமிழ் நூல்களுக்குள் திருக்குறள் தனியிடம் பெற்றுள்ளது. அது தனி முதலற நூல் என்றும்,
முழு முதல் தமிழ் நூல் என்றும் சன்றோர்களால் போற்றப்பட்டு வருகின்றது. இப்பொற்றுதல்
மொழிகளின் பொருள், திருக்குறள் தனித்தமிழ் நூல், முதல் நூல், அற நூல், முழு நூல், தமிழ்
நூல் என்பதாகும். அறநூல் என்பது, உலகுக்கு தேவையான் அறநெறிகளை வகுத்து கூறும் நூல்
என்பதாகும், முழுநூல் என்பது, நிறைவுடை நூல். அதாவது, உலக மனித சமுதாயத்திற்குத் தேவையான
அனைத்தையும் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் உணர்த்தும் நூல். தமிழ்நூல் என்பது,
தமிழின் வடிவமாக திகழும் நூல், அதாவது இயல், இசை, நாடகம் என முத்திறக் கூறுபாடுகளையும்
தன்னகத்து கொண்டு மொழியின் முழு உருவாகத் திகழும் நூல் என்பதாகும்.
தமிழின் முழு நூலாகிய திருக்குறள் உணர்த்தும் செய்திகள் கணக்கிலடங்கா. இக்காரணம்
கொண்டே பன்மொழியினரும், பன்னாட்டினரும் திருக்குறள் மீது உரிமை கொண்டாட முனைகின்றனர்.
உலகம் முழுமைக்கும் ஏற்புடைய பல உண்மைகளை, முக்காலத்திற்கும் ஏற்புடைய வகையில் உணர்த்தும்
உலக பொது மறை என்று சான்றோர்கள் போற்றுகின்றனர்