RSS

சங்கீதம் என்பது சரீரம், சாரீரம், சுருதி, லயம் இவைகளைக் கொண்டது

சரீரம் :
சரீரம் என்றால் உடம்பு. உடம்பு நன்றாய் இருந்தால் தான் சாரீரம் நன்றாக இருக்கும்

சாரீரம் :
சாரீரம் என்றால் குரல். குரல் நன்றாக இருந்தால்தான், சுருதி நன்றாக சேரும். குரலை ஸாதக பலத்தால் நன்றாக வளமடையச் செய்ய முடியும்

சுருதி :
சுருதி என்பது, மந்திரஸ்தாயி ஷட்ஜம் (ஸ) மத்யஸ்தாயி பஞ்சமம் (ப) தாரஸ்தாயி ஷட்ஜம் (ஸ்) இந்த மூன்று ஸ்வரங்களும் சேர்க்கம் இனிமையாய் ஒலிப்பதாகும். முக்கியமாகக் காது நன்றாய் கேட்க வேண்டும். பாடும் போதோ, வாத்யங்களில் வாசிக்கும் போதோ, சுருதியை நன்றாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். சுருதியை தாயாருக்குச் சமமாகச் சொல்லப்படுகிறது.

லயம் :
லயம் என்றால் தாளம். எண்ணிக்கையின் சமமான இடைவெளியை குறிக்கும். தாளத்தை தகப்பனாருக்கு சமமாக குறிப்பிடுவார்கள்.

கர்னாடக சங்கீதம் :
கர்னாடக சங்கீதம் என்பது, ஸ்வராளி வரிசைகள், கீதங்கள், வர்ணங்கள், ராக ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரங்கள் முதலிய அம்சங்களைக் கொண்டதாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Unknown சொன்னது…

ஸாதக பலம் என்றால் என்ன?

NITHYAVANI MANIKAM சொன்னது…

ஸாதக பலம் என்றால் பயிற்சி (practising or repeating)
பலமான பயிற்சி செய்தால் குரலை நன்றாக வளமடையச் செய்ய முடியும்