புல்லாங்குழல் மிகவும் இனிமையான இசைக்கருவி. இது இயற்கைக் கருவி என்றும் கூறலாம். இதில் சுரத்தான பேதங்களைக் காட்டுவதற்கு ஆறு துளைகள் உள்ளன. எல்லத் துவாரங்களையும் திறந்தும் பிறகு அவை ஒவ்வொன்றையும் முறையே விரலினால் மூடியும் வாசித்துவரும் போது ஏழு- இசைகளும் (ஸ, ரி, க, ம, ப, த, நி) முறையே ஆரோசையாக ஒலிக்கின்றன. இவை ஒரு தானத்தை (ஸ்தாயியை) மட்டும் குறிப்பனவல்ல, மெலிவு, சமன், வலிவு, ஆகிய மூன்று தானத்தின் நிலைகளையும் குறிக்கின்றன. அதாவது மூன்று தானங்களிலுள்ள அந்தந்தச் சுர ஒலிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு துவாரமும் கொடுக்கின்றது.
மாயவனாகிய கிருட்டிண பரமாத்மா இந்த புல்லாங்குழல் கருவியை இசைத்து சகல சீவன்களையும் பரவசமடையச் செய்தார் என்று நூல்கள் கூறினும், அதை வாசிப்பது எளிதன்று. அதில் சுருதி தவறுதல் இன்றி இனிமையான சுரம் பொருந்தி வருவது கடினமாகும். புல்லாங்குழலை இலக்கியமாக எடுத்துக்கொண்டு, சிலப்பதிகாரத்துள் பொதிந்துள்ள இசை முழுவதையும் நாம் நன்கு அறியலாம். புல்லாங்குழலில் ஒன்று அல்லது இரண்டு துவாரங்கள் அதிகமாகப் போட்டுக்கொள்வதுண்டு. அவை சுரங்கள் சுத்தமாய் ஒலிப்பதற்கு உதவுகின்றன என்பர்.
வீணை, பிடில் முதலிய கருவிகளில் அந்தந்த தானங்கள் வெவ்வேறு இடங்களில் பொருந்தி இருத்தல் இங்குக் குறிக்கத்தக்கது. ஒரே துவாரத்தில் ஒரே தான நிலை உள்ள இடத்தில் மூன்று தான நிலைகளும், ஒரே இடத்தில் ரி-யின் ஈரினங்களும் அதுபோல க-ஈரினங்களும், ம-ஈரினங்களும், த-ஈரினங்களும், நி-ஈரினங்களும் ஒலித்து வெளிப்படுவதே புல்லாங்குழலின் சிறப்பான இனிமைக்கு மூலகாரணம். மேலும் தானம் (ஸ்தாயி) என்பது வட்ட வடிவமானது என்பதைப் புல்லாங்குழல் விளக்கும். வீணை, பிடில் முதலிய கருவிகள் முதல் தானத்தின் பாதி அளவில் மூன்றாம் தானம் வருவது போலவும் காண்பிக்கும் போது, அந்த எல்லா தானங்களும் ஒரே அளவில் வட்ட வடிவமான உருவில் வருகின்றன என்பதைப் புல்லாங்குழல் எடுத்துக் கூறுகிறது.
மாயவனாகிய கிருட்டிண பரமாத்மா இந்த புல்லாங்குழல் கருவியை இசைத்து சகல சீவன்களையும் பரவசமடையச் செய்தார் என்று நூல்கள் கூறினும், அதை வாசிப்பது எளிதன்று. அதில் சுருதி தவறுதல் இன்றி இனிமையான சுரம் பொருந்தி வருவது கடினமாகும். புல்லாங்குழலை இலக்கியமாக எடுத்துக்கொண்டு, சிலப்பதிகாரத்துள் பொதிந்துள்ள இசை முழுவதையும் நாம் நன்கு அறியலாம். புல்லாங்குழலில் ஒன்று அல்லது இரண்டு துவாரங்கள் அதிகமாகப் போட்டுக்கொள்வதுண்டு. அவை சுரங்கள் சுத்தமாய் ஒலிப்பதற்கு உதவுகின்றன என்பர்.
1 comments:
அருமையான பதிவு.. இது போன்று பதிவுகள் இப்போது வருவது மிகவும் குறைவு..
தொடருங்கள்..
கருத்துரையிடுக