(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)
கார்டோன்களில் வாழும் யாழ்... (முழுமையா படியுங்கள்)
பண்ணியாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வழொஅதி
தெண்ணிலா மதியம் பொழில் சேருந் திருக்களருள்
உண்ணிலாவிய ஒருவனே இருவர்க்கு நின்கழல் காட்சியாரழல்
அண்ணலாஅ எம்மான் அடைந்தார்க்கருளாயே
--திருஞான சம்பந்தர்--
விளக்கம்:
குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருக்களர் எனும் திருப்பதியில் கோயில் கொண்டு எழிந்தருளியுள்ள பெருமானே!
யாழைத் திருத்திய சுரம் அமையப் பண்ணிப் பாடி ஆடும் மங்கையர் நிறைந்த திருப்பதியாகிய திருக்களருள்ளும், அன்பர்கள் உள்ளத்திளும் நீங்காது நின்றருளும் ஒப்பற்றவனே...
தமிழிசையில் மூத்த இசைக்கருவியாகத் திகழும் யாழ் இப்பதிகத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது... மேலும், திருஞானசம்பந்தர் அருளிய தேவர பாடல்களுக்கு யாழ் இசையை மீட்டியவர் நீலகண்ட யாழ்பாணர் என்பது குறிப்பிடத்தக்கது... தாழ்ந்த குலத்தில் பிறந்தும் திருஞானசம்பந்தரின் பாடல் பதிகங்களுக்கு யாழிசை மீட்டும் பாக்கியம் கிடைத்தது நீலகண்ட யாழ்பாணருக்கு... இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது என்று கூறிய அவரின மக்களின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பாடலை அருள வேண்டினார்.. அவரின் வேண்டுதலுக்கு இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார் திருஞானசம்பந்தர். சரியாக யாழ் இசைக்க முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக் கதையும் உண்டு...
யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம்...பழம்பெரும் தமிழிசைக்கருவி யாழ் நம் கைவிட்டு போய் விட்டது... நான் சிறுவதாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை "fair tale" கார்டோன்களில் கண்டதுண்டு. வழக்கத்தில் இவ்விசைக்கருவியை கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு... பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழ கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்துகொண்டேன்... இன்னும் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரியாமலே உள்ளது. யாழ் மட்டுமல்ல... இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே... அடியேனின் தாழ்மையான அன்பான வேண்டுகோள்... திரிந்து புதைந்த நம் தமிழ் இசையை மீண்டும் தோண்டுவோம்... தோண்டி மீட்போம்... :)

0 comments:
கருத்துரையிடுக