மிருதங்கம்.
தம்புரா
இதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவது தந்தியில் வருவது அந்த ஆதார சட்ச சுரத்திற்குத் தாழ்ந்த பஞ்சம சுரத்தை ஒலிப்பதாக சுருதி செய்தல் வேண்டும். கடைசியில் உள்ள நான்காம் தந்தியில் ஆதார சட்ச சுரத்திலும் தாழ்ந்த ச-ஒலிப்பதாய்ச் சுருதி செய்தல் வேண்டும். எனவே தந்திகளை மீட்டி வரும்போது அவை
“ ப [தாரஸ்தாயி low octave)]-ஸ-ஸ-ஸ [தாரஸ்தாயி low octave)]-” என்று ஒலிப்பதாய் இருக்க வேண்டும்.
இந்த நான்கு தந்திகளின் ஒலிகளும் தனித்தனியே பிரிந்து ஒலிக்காமல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் போது, பிரதான மெட்டின் மேல் நான்கு தந்திகளுக்கும் மெட்டிற்கும் இடையே துண்டு நூல்கள் செலுத்தி வைத்துக் கொள்ளப்படும். இதற்கு “சீவா” என்று பெயர். இது வண்டின் ஒலிபோல ரீங்காரத்துடன் தொடர்ந்து ஒலியாக கேட்கப் பெறும். இந்த “சீவா” என்ற ரீங்கார ஒலியினால் நன்றாக சுருதி சேர்க்கப் பெற்ற தம்புராவானது “ரிகரிக” என்று ஒலித்து செவிப்புலனாகும். இது மிகவும் இனிமையாக இருக்கும். தம்புராத் தந்திகளின் சுருதி நன்றாக சேர்ந்திருப்பதற்கு இங்குக் கூறப்பெற்ற “ரிகரிக” என்று ஒலிக்கும் சிறப்பே குறிகாட்டியாகும்.
தம்புராவைப் பயன்படுத்திக் கொண்டு பாடி வரும்போது, ஒவ்வொரு சுவரமும் அதன் தானத்தில் வருகின்றதோ என்பதை இசைப்போர் தெரிந்துக்கொண்டு பாடி வரலாம். பாடுவோர் பாடி நிருத்தியிருக்கும் காலத்தில் இத்தம்புராவின் ஆதார சுருதி ஒலியானது “சீவா” வின் தொடர்பால் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருப்பதால் அவர் பாடிக்கொண்டிருப்பதைப் போலுள்ள ஓர் உயர்ச்சியையும் அது உண்டாக்குகின்றது.
ஸ்வர தாள குறிப்புகள்
’ = இது ஒரு அட்சர காலத்தைக் குறிக்கும்.
’’ = இது இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும்
’’’ = இது மூன்று அட்சர காலத்தைக் குறிக்கும்.
. = இது ஸ்வரத்தின் மேல் இருந்த்தால் “ தாரஸ்தாயி” என்றும்
ஸ்வரத்தின் கீழ் இருந்த்தால் “மந்திரஸ்தாயி” என்றும் குறிக்கும்.
* = இது வர்ணத்தின் ஆரம்ப இடத்தைக் குறிக்கும்.
- = இது ஸ்வரங்களைப் பிரித்துப் பாடும் இடத்தைக் குறிக்கும்.
|| = இது தாளத்தின் முடிவைக் குறிக்கும்.
2, 3, 4, = இந்த நம்பர்கள் எழுத்தின் பக்கத்தில் வந்தால் அந்த எழுத்தின்
சப்தத்தைக் குறிக்கும்.
தமிழிசைக் கருவி - பறை (தப்பு)
தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.