RSS

கடம்

கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி. இது ஒரு பெரிய மண் பானையாகும். கட இசைக்கலைஞர் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.
கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது.
வாய்ப்பாட்டுக் கச்சேரிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும், நடைபெறும், மிருதங்கம், கடம், கஞ்சிரா, தவில் போன்ற கருவிகள் சேர்ந்து தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஐந்து
இசைக் கருவிகளையும் பார்த்திருக்கிறேன்.
இசையைக் கேட்டிருக்கிறேன்.ஆனால்
இத்தனை அபூர்வத் தகவல்களையும்
இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன்
ந்ல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

NITHYAVANI MANIKAM சொன்னது…

வணக்கம் நண்பரே.... வாழ்த்துகளுக்கு நன்றி...இதுபோன்று இன்னும் பல இசைக்கருவிகளைத் தமிழன் கண்டுள்ளான்.... அவற்றுள் சில இப்பொழுது வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது..... மேலும் இதுபோன்று தகவல்களை பதிவு செய்கிறேன்....