தமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு. தமிழிசை என்பதுதான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறுபட்டவை அல்ல. ஒன்றே. வடக்கில் உள்ள பல நாடுகளில் கடல் இல்லை. அதனால் கடற்கரையும் இல்லை. ஆனால் தமிழகமோ மூன்று பக்கங்களிலும் கடல்களையும் கடற்கரைகளையும் கொண்டது. சோல மண்டல கடற்கரை, பாண்டி மண்டலக் கடற்கரை, சேர மண்டலக் கடற்கரை என்ற பெயர்கள் இன்றுவரை மக்களிடையே காணப்படுகின்றதாம். இதனால் தமிழகத்தைக் கரை நாடு என்றும் தமிழிசையைக் கரை நாட்டு இசை எனவும் வடக்கேயுள்ளனர் குறிப்பிட்டு வந்தனராம். அதையே பலரும் ”கர்நாட்டிசை” என்றனர். ஆங்கிலேயனும் அதை “கர்நாட்டிக் இசை” என்றான். ஆகவே கரை நாட்டு இசை என்பது தமிழ் இசையைக் குறிப்பது. காலப்போக்கில் வடமொழியின் மீது பற்றும், வட நாட்டின் மீது காதலும் கொண்ட சிலர், கரை நாட்டு இசையை, வட நாட்டு இசை என்றும், தமிழிசை இதற்கு முற்றும் மாறானது என்றும் கூறத் தொடங்கினர். தமிழில் உள்ள இசைக்கலை நூல்கள் வடமொழியில் பெயர்த்து எழுதினர். முன்னால் பதிவில் சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள தமிழிசைப் பற்றி சிரு விளக்கம் உள்ளது. இதுவே, தக்கச் சான்றாகும்.
தமிழிசைச் சிறப்பு
இசை பலவகை. அதில் தமிழிசை ஒருவகை. இரண்டெழுத்துள்ள இச்சொல் பொருள் அமைதியுடையது. சுதி, பாட்டு, பண், பாடுவோர் உள்ளம், கேட்போர் உள்ளம் ஆகிய அனைத்தும் இசைந்தால் தான் அதற்கு இசை என்று பெயர். இல்லையேல் அது ‘இரைச்சல் என்றாகி விடும்’. இசைக்கு ‘புகழ்’ என்றும் பெயர் உண்டு. ‘ஈதல் இசைப்பட வாழ்தல்’ என்ற சொற்றொடரும் இதனை மெய்பிக்கும்
“இசையென்னும் எச்சம் பெறாவிடின் வசையென்ப வையத்தார்க் கொல்லாம்” என்பதும் , “வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கைப் பொறுத்த நிலம்” என்பதும், வசைய்யொழிய வாழ்வாரே வாழாதவர் என்பதும் வள்ளுவர் வாக்கு. இதிலிருந்து வசைக்கு எதிர்மறை இசை என்பதை நன்கறியலாம். அக்காலத்து மன்னர்களை பாணரும் புலவரும் இசையின் மூலமே புகழ்ந்ததால், இப்பொருள் வந்தது போலும். (தமிழின் சிறப்பு கி.ஆ.பெ. விசுவநாதம்)
இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் என்று குறிப்பிட்டனர். இறைவனை இசைக் கொண்டு பாடியே வணங்கினர். இம்முறையில் பண்ணோடு கூடிய பக்தி பாடல்கள் பல தமில் மொழியில் உள்ளன. இவற்றுள் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம், திருப்புகழ் முதலியவை குறிப்பிடத்தக்கவை. தமிழிசைத் தோன்றிய காலம், தமிழ் மொழி தோன்றிய காலமே. தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசைக் கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன. அவை, தாலாட்டு இசை, சோறூட்ட இசை, திருமண இசை, ஒப்பாரி இசை மற்றும் இன்னும் பல. இசை என்பது வாய்யினால் பாடுவது மட்டுமல்ல; கருவியினால் இசைப்பதும் இசையே ஆகும். அவை தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என மூவகைப்படும். இவற்றை விழா நாட்களிலும் இசைத்து முழக்குவது மட்டுமல்ல பிற நாட்களிலும் இசைத்து முழக்குவதுண்டு. மணப்பறை, பிணப்பறை, போர்பறை, விழாப்பறை என்ற சொற்கள் இவற்றை பெய்பிக்கின்றன.
தமிழிசை (தமிழும் இசையும்)
கர்நாடக இசையென்று இப்பொழுது கூறப்படுகின்ற தமிழிசைக்கு வடமொழி நூலாகிய சங்கீத இரத்தினாகரம் என்ற நூலே இலக்கண நூலாகக் கருதப்பெற்று வருகின்றது. ஆனால் உண்மையில் நம் நாட்டு இசையிலக்கணச் செம்பாகங்கள் சிலப்பதிகாரத்திற் காணப்பெறும் ஒவ்வொரு கதையினுள்ளும் இரத்தனமணிபோல நுட்பமாக பொதிந்துள்ளன --(மகா வித்வான் வா.சு கோமதி சங்கர் ஐயர்)--
இசையென்பது தமிழன் பண்பாட்டில் சிறப்பு வாய்ந்த கலையாகும். இக்கலை முழுக்க முழுக்க ஒலி உருவினாலாய கலவையே ஆகும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த ஒரு கலையை முதன்முதலாகக் கண்டவர்கள் நம் தமிழரே ஆவர். இசைக்கலையின் சிகர்மாக விளங்குவது நிறமென்ற இராகமே ஆகும். இவ்வாறான நிறத்தை ஆளத்தி செய்வது என்பது தமிழிசையில் மட்டுமே. இவ்வழக்கு வேறு எந்த நாட்டின் இசைக்கலையிலுமே இல்லை. இத்துணை மாண்பு பெற்று அமைந்துள்ள இசைக்கலைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக உரைக்கப்படும் சிலப்பதிகாரம் என்ற நூலே இலக்கண நூலாக இப்போது மதிக்கப் பெறுகின்றது. அது காப்பிய இலக்கியமாக மட்டுமின்றி இசைக்குறிய இலக்கண நூல்தானென்று மதித்து ஏற்றுகொள்ளுதல் வேண்டும் (இசைத்தமிழ் இலக்கண விளக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
அடுத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த வடமொழி நூலாகிய சங்கீத இரத்தினாகரம் இசையிலக்கணத்தைச் செம்மையாகக் கூறும் நூலாக மதிக்கப்பெறுகின்றது. சங்கீத இரத்தினாகரத்தை உற்று நோக்கினால் சிலப்பதிகாரத்தில் கூறப்பெற்றுள்ள இசைநுட்ப பகுதிகளே அங்கு வடமொழியில் வரப்பெறுதலைக் காணலாம். எனவே இவ்விரு நூல்களிலும் கூறப்பெறு இசைச் செய்துகள் தான் இசையின் இலக்கணத்தை ஒன்றுபடுத்திக் காட்டுகின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)