யாழ்
யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யா+ழ் = யாழ், நரம்புகளால் கட்டப்பட்டது என்பது பொருள்.
பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற கருவியோ, யாழ் போன்ற தந்தி அல்லது கம்பி இசைக் கருவியோ இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். தமிழகத்திலும் ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி யாழ் இருந்திருக்கிறது. இன்று அந்தக் கருவி இல்லை.
பொதுக் காலம் (கி.பி.) 10ம் நூற்றாண்டில் இந்தக் கருவி மறைந்து ருத்ர வீணை, கின்னாரி, கச்சபி, பின்னர் சிதார், சாரோட், சரஸ்வதி வீணை போன்றவை பிரபலம் ஆகின. சீரியாழ் என்பது வீணை போன்ற ஒரு கருவிதான்யாழ் பார்ப்பதற்கு வில்லைப் போல் இருப்பதால் அப்பெயர் பெற்றது. யாழ் கருவியின் நவீன வடிவம் மயில் யாழ். கம்பி இசைக் கருவிகளில் ஒன்றான இது, மயில் வடிவில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அப்பெயர் பெற்றது.
சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர், யாழ் சிந்து வெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்[ஆதாரம் தேவை]. அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் உறுப்பமைதி தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.
நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது.
சிலப்பதிகாரத்தில் யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எப்படி இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிக்கிறார்கள். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார்.
யாழ் வகைகள்
• பேரியாழ் (21 நரம்புகளை உடையது)
• மகரயாழ் (17 நரம்புகளை உடையது)
• சகோடயாழ் (16 நரம்புகளை உடையது)
• செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது)
இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.
யாழ் நூலில் கூறப்படும் யாழ் வகைகள்:
• வில் யாழ்
• சீறி யாழ், செங்கோட்டியாழ்
• பேரி யாழ்
• சகோட யாழ்
• மகர வேல்கொடி யாழ்
• மகர யாழ் / காமன் கொடி யாழ்
• மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்
வீணையின் வரவே யாழின் செல்வாக்கையழித்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

Time in Kuala Lumpur 







7 comments:
வணக்கம் தோழி. வாழ்த்துகள். உங்கள் பணி தொடர இறையருள் வேண்டுகிறேன். வாழ்க!
வணக்கம் நண்பா....
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
vaalthukal..:)
நன்றி அண்ணா
வணக்கம் தோழி,லலிதாராம் மூலமாக உங்களது வலைப்பதிவை படிக்கும் வாய்ப்பு இன்று கிடைத்து.கர்நாடக இசையை தமிழ் மக்கள் மறந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் உங்களைப்போன்ற இசை ரசிகரை அறிந்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். உங்களுடைய பதிவுகள் சிறப்பாக இருக்கின்றன .உங்களுடைய எழுத்துக்கள் எதிர்காலத்தில் பல இசை ரசிகர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை ஏற்ப்படுகிறது . இசையை காப்பாற்றும் பொறுப்பு நம்மைப்போன்ற இளைஞகளிடமே உள்ளது .உங்களது பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் . கோபாலகிருஷ்ணன்
நாதஸ்வர கலைஞர்
Madam recently I read your post. Give basic knowledge about music . I wish to play harp. Do u know where to study
Ur post r very interesting. Gives a proper knowledge. Thank u
கருத்துரையிடுக