RSS

இந்துஸ்தானி இசை

வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும்
7 சுவரங்கள், 12 சுவரஸ்தானங்கள், 22 சுருதிகள், வாதி, சம்வாதி, விவாதி, அனுவாதி என்பன யாவும் இவ்விரு இசைகளுக்கும் பொதுவான அம்சங்களாகும். கருநாடக சங்கீதத்தில் 72 மேளகர்த்தாக்கள் (தாய் ராகங்கள்) இருப்பதைப் போன்றே ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் 10 தாட்கள் உண்டு.
கர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப அப்பியாச வரிசைகள் (ஸ்வராளி வரிசைகள்) மாயாமாளவகெளளை இராகத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. ஆனால் இந்துஸ்தானி சங்கீதத்தில் ஒவ்வொரு ராகத்திலும் பலடாஸ் என அழைக்கப்படும் சுவர அப்பியாச வரிசைகள் கற்பிக்கப்படுகின்றன.
‘கியால்’ மற்றும் ‘துருபாத்’ ஆகிய இரண்டும் இந்துஸ்தானிய இசையின் இரண்டு முதன்மை வடிவங்களாகும். எனினும் பல பிற மரபு ரீதியான மற்றும் பகுதியளவு மரபுசார்ந்த வடிவங்கள் உள்ளன. இந்துஸ்தானி இசையில் ஒரு டிரம் வகையான தபளா வாசிப்பவர்கள், வழக்கமாக காலத்தின் குறியீடான ரிதத்தை வைத்திருக்கின்றனர். மற்றொரு பொதுவான இசைக்கருவி கம்பிகட்டப்பட்ட தம்புரா ஆகும், இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் (ரீங்காரம்) இசைக்கப்படும். இந்த பணியை பாரம்பரியமாக தனியாகப் பாடுபவரின் மாணவர்கள் செய்கின்றனர். இது சலிப்படையவைக்கும் பணியாகத் தோன்றினாலும், உண்மையில், இதைப் பெறும் மாணவருக்கான வாய்ப்பு பெருமையானது மற்றும் அரிதானது. சாரங்கி மற்றும் ஆர்மோனியம் உள்ளிட்டவை பக்கவாத்தியத்திற்கான பிற இசைக்கருவிகள் ஆகும். மென்மையான காதல், இயற்கை மற்றும் பக்திப்பாடல்கள் ஆகியவை இந்துஸ்தானி இசையின் முதன்மைக் கருப்பொருள்களாகின்றன.
கச்சேரியானது வழக்கமாக ராகத்தின் மெதுவான விரிவுபடுத்தலுடன் தொடங்குகின்றது, இது பாதாத் என்று அறியப்படுகின்றது. இதன் கால வரம்பானது இசைக்கலைஞரின் பாணி மற்றும் முன்னுரிமையினைச் சார்ந்து நீண்ட நேரத்திலிருந்து (30–40 நிமிடங்கள்) மிகவும் குறைந்த நேரம் (2–3 நிமிடங்கள்) வரையில் நீடிக்கலாம். ராகம் நிலைநிறுத்தப்பட்டவுடன், சந்தமுள்ளதாக மாற பாடல் முறையைச் சுற்றிலும் இசை அலங்கரிப்பு தொடங்கி, மெதுவாக வேகமும் அதிகரிக்கின்றது. இந்தப் பிரிவானது ‘துருத்’ அல்லது ‘ஜோர்’ என்று அழைக்கப்படுகின்றது. இறுதியாக மோதுகை இசைக்கருவி வாசிப்பவர் சேர்ந்ததும் தாளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்துஸ்தானி இசையில் இசைக்கருவிகள் மற்றும் வழங்கல் பாணி இரண்டிலும் ஆர்வமுள்ள குறிப்பிடத்தக்க அளவிலான பெர்சியர்கள் உள்ளனர். மேலும் கர்நாடக இசை போன்றே இந்துஸ்தானிய இசையும் தன்னகத்தே பல்வேறு நாட்டுப்புற இசைகளையும் கொண்டுள்ளது.
இந்துஸ்தானிய இசை வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் தான்சேன் ஆவார். இவர் அக்பரின் அரசவையில் இரத்தினக் கல் போல் விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கர்நாடக சங்கீத வித்துவான்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தாளம் - லயம்

தாளம் என்ற சொல்லிற்குத் தட்டிவருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள். இசை சம்பந்தமாகப் பேசும்போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கின்றது. ஒரே அளவாகத் தாளத்தை தட்டிவரும்போது அதில் ஓர் இசையுணர்ச்சி உண்டாகின்றது. இது ‘லய’ உணர்ச்சி எனப்பெறும். எப்படி ஏழிசை சுரங்களெல்லாம் ஆதார சுருதியிலே சேர்ந்தொலிக்கும் போது ஓர் உணர்ச்சி உண்டாகின்றதே, அதேபோல தாளத்தையும் ஓர் அளவாய்த் தட்டிப் போட்டுவரும்போது அதுமாதிரியான உணர்ச்சி உண்டாகின்றது. ‘லயம்’ என்ற சொல்லிற்கு ஒன்றுதல் என்பது பொருள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Vanessa Mae & AR Rahman - Raaga's Dance song

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Nithyasree Mahadevan: Carnatic (S. Indian) Vocal Recital

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அகாரசாதகம்

உயிரெழுத்துகளாகிய ஆ, ஈ, ஊ, என்ற அகார, இகார, உகார உயிரினாலேயே சுரங்களைப் பாடுதல் வேண்டுமென்பது நம் மூதாதியினர்களின் கருத்தாகும். அதாவது ஒவ்வொருவரின் தொண்டையிலிருந்து வரும் உயிரொலியானது சுருதியோடு ஒன்றி ஆ- என்றோ, ஈ-என்றோ, ஊ-என்றோ எது பொருந்துமோ அதைக் கூறி, ஏழிசைகளையும் இயற்றுதல் வேண்டுமாம்.

விளக்கம் :-
ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ்
ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ
ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ
ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ
ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ
ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ

இவ்வாறு ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்று அகார, இகார, உகார முறையில் பாடும்போது, ஏழிசைகளும் இவ்வுயிர்களினால் தொடர்ந்து ஒலியோடு வரல்வேண்டும். இடைவெளிவிட்டுக் காணுதல் கூடாது.

இம்முறையைதான் “ அகாரசாதம்” எனக் கூறுகின்றனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS