RSS

இசை பயின்றால் அறிவு பெருகும்

மூலையின் இடது வலது பாகங்களை ஒரு சேர பயன்படுத்தும் ஆற்றல் சாதாரண மனிதர்களை விட வாத்திய கலைஞர்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. சாதாரண மனிதர்களைவிட நன்கு பயிற்சி பெற்ற வாத்தியக் கலைஞர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்களாம். திறமையான கலைஞர்கள் தமது சிந்தனைகள் பல முனைகளிலும் ஒரு சேர செலுத்திவதிலும் வல்லவராக இருக்கிறார்களாம்.

வாத்திய கலைஞர்கள் இசையை வெளிப்படுத்தும்போது வெவ்வேறு வரிவடிவங்களை ஒரே சமையத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி வெளிப்படுத்துவதை நாம் கவனித்திருக்கிறோம். இசை குறியீடுகளைப் படிப்பது என்பது இடது பக்க பெரு மூலையின் வேலை. இசைக்கலைஞர்கள் தன்னுடைய கற்பனைத் திறனை அத்துடன் இணைத்து வாசிப்பது என்பது வலது பக்க பெருமூலையின் வேலை.

வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர்கள் இந்த ஆய்வைசெய்வதற்கு எட்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் பயிற்சி பெற்ற 20 மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார். பியானோ, காற்றுக்கருவிகள் (துளைக்கருவிகள்), தந்திக்கருவிகள், தோல் கருவிகள், ஆகிய வாத்தியங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களும், அனைத்து வயது பிரிவினர், இரு பாலர், வெவ்வேறு கல்வித் தகுதியுடைய மாணவர்களும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதுமட்டுமல்லாமல், இசைக்கலைஞரின் அறிவுத்திறன் (IQ) அளவீடு செய்யப்பட்டபோது மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆகையால், மாணவர்கள் இசை பயின்றால் கல்வியிலும் சிறந்து விளங்க முடியும்.  

நன்றி
பயனீட்டாளர் குரல் ஜீலை-ஆகஸ்ட் 2011 இருந்து பெறப்பட்டது.
retrived from payaneetalar kural julai ogos 2011

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS