(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)
ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய...
ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய...
சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.
இப்படி பல மகான்கள் உள்ளனர். சிலர் தம்மை உலகிற்குக் காட்டி விட்டும் சிலர் காட்டாமலும் மறைந்துள்ளனர். மகான்கள் மக்களோடு வாழ்ந்து, சமையம் வரும் போது பூத உடலை உதறிவிட்டு மறைந்துவிடுகின்றனர். இப்படிப்பட்ட மகான்கள் பூத உடலோடு இருக்கும் போது யாரும் அவர்களை உணர்ந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய மறைவுக்குப் பின்பு தான் அவர்களுடையப் பெருமைகள் உலகிற்கு வெளிப்படுகின்றது. அப்படி தன்னை வெளிக்காட்டியவர்களுள் ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகளும் ஆவார்.
ஆம், மலேசிய நாட்டில் ஜீவ சமாதி அடைந்த ஒரே சித்தர் இவர் என்றும் கூறலாம். இது பலருக்கு விந்தையாகவும் இருக்கலாம். ஆனால் இது உண்மை. சுவாமிகளின் வரலாற்றைப் பதிவு செய்ய அடியேன் கடமைப்பட்டுள்ளேன். இந்த வரலாறு சுவாமிகள் பூத உடலுடன் இருந்த போது அவருடன் பழகிய மக்களின் அனுபவங்கள் மூலமும் அவரின் சீடர்கள் மூலமும் கிடைக்கப் பெற்ற விடயங்களைக் கொண்டு சிறு ஆய்வு ஒன்று தொடுக்கப்பட்டிருக்கிறது. அதை இணயத்தலத்தில் பதிவு செய்வதன் மூலம் பலர் இந்த மகானைப் பற்றி அறிய வாய்ப்பு கிடைக்கும். ஆகவே, அனைவரும் தங்களின் பொன்னான நேரத்தைக் கொஞ்சம் செலவுச் செய்து இதைக் கண்டிப்பாக படிக்குமாறு வேண்டுகிறேன்.
சுவாமிகள் 1814- ஆம் ஆண்டு இந்தியாவில் கல்கத்தாவில் பூரி நகரத்தில் தை மாதத்தில் குழந்தையாக அவதரித்துள்ளார். சுவாமிகள் தன்னுடைய 18 வயதிற்கு மேல் சிட்டக்கா, பர்மாவில் வாழ்ந்தார்.
சுவாமிகள் பின்பு தாய்லாந்து வழியாக மலேசிய திருநாட்டில் காலடிப் பதித்தார். சுவாமிகள் மலேசியாவில் முதன் முதலாக தஞ்சோங் மாலிம் ரயில்வேயில் “பிரேக்மேன்” ஆக 4 ஆண்டுகள் வேலைச் செய்துள்ளார்.
சுவாமி கடாரம் மாநிலத்தில் பாலிங் நகரில் சில காலம் வாழ்ந்துள்ளார். சுவாமியின் அருள் நிறைந்த தோற்றத்தைக் கண்டு எல்லோரும் அவரை சுவாமிகள் என்று அழைத்தனர். இப்பெயரோடும், 8 வருடங்கள் சுவாமிகள் அங்கே தங்கினார்கள்.
பின்பு சுவாமிகள் சிங்கபூரை நோக்கித் திருத்தலயாத்திரைச் சென்றார். செல்லும் வழியில் தைப்பிங்கில் தங்கினார். அப்பொழுது, ஆங்கிலேயப் படையைச் சேர்ந்த பர்மாக்காரர்கள் பகைவர்களுடைய உளவாளி என்ற சந்தேகத்தின் மீது ஒரு நாள் முழுதும் சிறைபடுத்தி காவலில் வைத்தனர். இறைவன் தன் பக்தர்களைச் சோதிப்பது வழக்கம். இதற்கு சுவாமிகள் விதிவிலக்கானவர் அல்ல. சுவாமிகளுடைய அருட்சக்தி அவர்களுக்குள்ளே புகுந்து வேலைச் செய்ய ஆரம்பித்தது. விடிந்ததும் எந்த ஒரு விசாரணையும் இன்றி விடுதலைச் செய்யப்பட்டார்.
சுவாமிகள் விடுதலைக்குப் பிறகு சிரம்பானுக்குச் சென்றார். அங்கு அவரின் தவக்கனல் பலரைக் கவர்ந்து இழுத்தது. சுவாமிகளின் தரிசனம் பெற்றுப் பலர் மன ஆறுதல் பெற்றனர். அந்த ஒன்றே சுவாமிகளுடையப் பெருமைகளை அறிய வெளிப்படுத்தியது.
சுவாமிகள் சிரம்பானிலிருந்து தெழுக் அன்சனுக்குப் பயனித்தார். அங்கு கஷ்டப்படுவோர்களுக்கு/ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தார்கள். இதற்காக சுவாமிகள் எங்கு, எப்படி, யாரிடமிருந்துப் பணம் சேர்த்தார் என்பதை எவரும் அறியார்.
பின்பு சுவாமிகள் தாப்பா நகரைச் சேர்ந்தார். தாப்பா நகரம், மலேசியாவில், பேராக் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய பட்டணம். சுவாமிகளுக்கு தாப்பா நகரம் மனம் சாந்தியைக் கொடுத்தது. ஆகவே, சீனர் மயானம் அருகில் ஒரு சிறு குடிசை அமைத்துக் கொண்டு சாதனையில் ஈடுப்பட்டார். அருகாமையில் ஒரு வங்காளி கோயிலும் இருந்தது. அருகாமையில் இராஜூ கம்போங் பக்கம் இருந்த தோட்டத்தில் 8 அடி உயரம் கொண்ட இடத்தில் ஒரு சிறு குடிசையில் இருந்தார். சுவாமிகள் தனிமையாகவே இருந்தார். ஆண்டு கணக்காக தொடர்ந்து சுவாமிகள் சாதனையில் ஈடுப்பட்டார். சுவாமிகள் பெரும்பாலும் மௌனமாகவே இருந்தாராம். மிகக் குறைவாகவே மக்களிடம் தொடர்புக் கொள்வாராம்.
சுவாமிகள் வெளியே செல்லும் காலங்களில் இராமலிங்க சுவாமிகளைப் போல் முக்காடிட்டுச் செல்வாராம். சுவாமிகள் குளித்ததை யாரும் கண்டதில்லை. ஆனால் அவர் மீது ஒருவகையான திவ்விய வாசனை வீசிக் கொண்டே இருக்கும். சுவாமிகளின் பிரதான உணவுகள் பச்சைபயிர், கடலைப்பருப்பு, மற்றும் பழங்கள் ஆகும்.
சுவாமிகள் தம் ஆசிரமம் அமைத்த ரப்பர் தோட்டத்தில் மூன்று ஏக்கர் நிலத்தை விலைக் கொடுத்து வாங்கினார்கள். சுவாமிகளிடம் பணம் எப்படி வந்தது என்பதை யாரும் அறியார். சுவாமிகளுக்கு ஒரு இஸ்லாமிய அன்பர் தமது பெயர் வெளியிலே வராதவாறு இப்பணத்தை மிக இரகசியமாகக் கொடுத்தார் என்று பிற்காலத்தில் சீடர்களுக்குக் கூறியுள்ளார். சுவாமிகள் தாம் வாங்கிய இடத்தில் ஏழைகள் வீடுகள் அமைத்துக் கொள்ளும் படி கூறினார். இன்றும் அவ்விடத்தில் பல குடும்பங்கள் இருக்கின்றன. மிகவும் குறைந்த நில கட்டணத்தை மக்கள் செலுத்தி வருகின்றனர். ஜெகந்நாத சுவாமிகளுக்குச் செந்தமான இடத்தை எவரும் விற்கவும் வாங்கவும் இயலாது. தற்பொழுத்து சுவாமிகளின் ஆசிரமம் மலேசிய இந்து சங்கத்தின் பார்வையின் கீழ் அமைந்துள்ளது.
சுவாமிகளுக்கு மூன்று சீடர்கள். வீமவர் (இந்தோனேசியா), சித்திரமுத்து அடிகளார்(பணைக்குலம், இராமஜப்புரம், இந்தியா) மற்றும் சத்தியானந்தா (சுத்த சமாஜம் கோலாலும்பூர்). இவர்கள் மூவரும் தான் சுவாமிகளின் ஆத்மானந்த சீடர்கள். சுவாமிகளின் சீடர்களில் ஒருவருக்குக் கேணியா நோய் நீண்ட காலமாக இருந்து வந்தது. அறுவைச் சிகிச்சைச் செய்துதான் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் சீடர் குருவிடம் பூரண சரணாகதி அடைந்த பிறகு அன்று தொடக்கம் அந்த நோய் அடையாலம் தெரியாமல் மறைந்து விட்டதாம். இச்செய்தியைக் கூறும்போது அவரின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியதாம்.
சுவாமிகள் தன்னை இவ்வுலகத்திற்கு ஒரு மகானாகக் காட்டிக்கொள்ளவில்லை. மிகவும் எளிமையாக கோவனத்துடன் தான் இருப்பாராம். அவரைச் சுற்றி பலர் இருந்ததில்லை. 8 அடி குடிசையும் கோவனத்தையும் மட்டுமே கொண்டு சாதனைச் செய்துள்ளார். ஒரு பித்தனைப் போல் வலம் வந்தாராம். பலர் அவரைப் பயித்தியக்காரன் என்றும் கேலிச் செய்தனராம். சுவாமிகள் தாப்பா மருத்துவமணை அருகே உள்ள சிவன் ஆலத்திற்கு அடிக்கடி செல்வாரம். மேலும் சுவாமிகள் பூத உடலுடன் இருக்கும் போது அவரை கண்டவர்கள் இன்னும் வயது முதிர்ந்து சிலர் இருக்கின்றனர். சுவாமிகள் எங்கும் சென்றதில்லை. ஆனால் பல இடங்களில் பலருக்குப் பல உருவங்களில் காட்சி கொடுத்திருக்கிறார்கள்.
சுவாமிகளின் சீடர்களில் ஒருவரான சித்திர முத்து அடிகளார் மலேசியாவில் பல ஆலயங்களில் மௌன விரதம் இருந்தாராம். அந்த சமையம் தைப்பிங் மாரியம்மன் ஆலயத்தில் கே. எஸ், குருசாமி பிள்ளை என்ற ஒருவர் கணக்குப்பிள்ளையாக வேளைப் பார்த்தாராம். இவர் சுவாமிகளின் சீடரான தவத்திரு சித்திரமுத்து அடிகளுக்குப் பணிவிடைச் செய்யும் பாக்கியம் கிடத்துள்ளது. அப்பொழுது சித்திரமுத்து அடிகள் ஜெகந்நாத சுவாமிகளின் மூலம் தான் உண்மைகளை உணர்ந்து துறவரம் பூண்டதைக் கூறியுள்ளார்.
ஜெகந்நாத சுவாமிகளைச் சந்திக்க ஆவல் கொண்டு 1951 ஆம் ஆண்டு சுவாமிகளைத் தேடி சென்றிருக்கிறார் குருசாமி பிள்ளை. அங்குள்ள தன் நண்பர் செல்லையாவிடம் சுவமிகளைப் பற்றி விசாரித்தார். ஆனால் அவர் நண்பர் “ நான் பல வருடம் இருக்கிறேன் நீங்கள் தேடி வருவது போல் சுவாமிகள் யாரும் இங்கு இல்லை” என்றாராம். உடனே கையில் இருந்த சுவாமிகளின் படத்தை குருசாமி நண்பரிடம் காட்டினார். அதற்கு நண்பர் “ கோவனத்துடன் ரோட்டிலே பைத்தியரானைப் போல் அலையும் இவரையா நீ பார்க்க வந்தாய்?” என்று கூறினாராம்; வழியும் காட்டினாராம்.
பின்பு சுவாமிகளைப் பார்த்தவுடன் குருசாமி பிள்ளை கைக்கூப்பி வணங்கிய போது சுமிகள் “பைத்தியக்காரன் பித்தன் என்று சொன்னானே அவனைப் போய் வணங்கு என்றாராம்”. இதைக் கேட்ட குருசாமி பிள்ளை வியந்தாராம். அங்கு நடந்ததை எப்படி சுவாமிகள் அறிந்தார் என்று. பின்பு சுவாமிகள் குடிசையினுல் அவரை அமர்த்தினாராம். சற்று நேரத்தில் திடீரென்று பெறுத்த சத்ததுடன் கூரையிலிருந்து ஒரு பெரிய நாகப்பாம்பு தொங்கியதாம். இதைக் கண்டதும் பயந்துபோய் சுவாமிகளைக் கட்டிப்பிடிக்க முயன்ற போது சுவாமிகள் அங்கு இல்லையாம். சற்று நேரத்தில் பயம் தெளிந்ததும் பார்த்தாராம் சுவாமிகள் பக்கத்தில் இருந்தாராம். பின்பு அந்த பாம்பு மீண்டும் மேலே சென்று விட்டதாம். சுவாமிகள் வெறும் கோவனத்துடன் இருக்கிறாரே நல்ல வேட்டி ஒன்று தயாரித்து தரட்டுமா என்று குருசாமி கேட்டாராம். அதற்கு சுவாமிகள் கோவனத்தின் அருமையை நீ பின்னால் தெரிந்துகொள்வாய் என்று கூறி தன்னிடம் இருந்த ஒரு மாற்று கோவனத்தை குருசாமி பிள்ளைக்குக் கட்டி விட்டாராம்.
பின்பு 1953 ஆம் ஆண்டு குருசாமி பிள்ளை தாப்பாவிற்குச் சுவாமியைக் காணச் சென்றாராம். அந்நேரம் சித்திர முத்து அடிகள் இலங்கையில் தங்கியிருந்தார். சுவாமிகள் தாப்பாவில் இருந்துகொண்டே, இலங்கையில் யோக சுவாமி என்று ஒருத்தர் இருப்பார் அவருக்குக் கடிதம் எழுதிக் கொண்டு போய் கொடு என்றாராம். இலங்கையில் இருந்த சித்திர முத்து அடிகள் சுவாமிகள் குருசாமி பிள்ளையிடம் கூறியது போல் இலங்கையில் தேடி அலைந்தாராம். சுவாமிகள் கூறியது போல் அங்கு யோக சுவாமிகள் இருந்தாராம். சுவாமிகள் எங்கும் சென்றதில்லை. இருந்த இடத்திலிருந்தே பல இடங்களைக்குச் சென்றுள்ளார்.
சுவாமிகள் தமது சமாதி ஆகும் தினத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டார்கள். உடனே தன் சீடருக்குத் தந்தி கொடுத்து வரவழைக்குமாறு கட்டளையிட்டார். சுவாமிகள் சமாதி அடைந்து விட்டார் என்னும் செய்தியைத் தந்தியில் குறிப்பிடுமாறு கூறியுள்ளார். சுவாமிகள் முன்கூட்டியே சமாதிக்குறிய இடத்தை தெரிவுச் செய்தும் அதற்குத் தேவையான ஆயத்தங்களையும் தயார் செய்யும்படி தன்னிடம் வேளைச் செய்த பொன்னுசாமி மேசனாரிடம் கூறினார். சுவாமிகள் சமாதி அடையும் பொழுது அவரின் வயது 145.
சுவாமியின் சீடர் வந்து சேர்வதற்கு முன்பே சுவாமிகள் சமாதி நிலை அடந்துவிட்டாராம். சுவாமிகளின் மூன்றாவது சீடரான சுவாமி சத்தியானந்தா உரிய நேரத்தில் தேவயான பொருட்களைக் கொண்டு வந்து சேர்ந்தார். சமாதிக்குத் தேவையான பச்சைக்கற்பூரம், உப்பு, விபூதி போன்றவற்றை எடுத்து வந்திருந்தாராம். சுவாமிகள் தனது கோவனம், தண்ணீர் குடிக்கும் கொட்டாங்கூச்சி, ஆசனப்பலகை, சங்குகள், பாதரட்சை மற்றும் அவர் வழிப்பட்டு வந்த இராமலிங்க சுவாமிகளின் படம் முதலியவையைச் சமாதிக்குள் வைத்துவிட வேண்டும் என்று பொன்னுசாமி மேசனாரிடம் கூறினார். அந்த நேரத்தில் மக்கள் அங்கு கூடிவிட்டனர். அங்கு நீண்ட நேரம் சிவ நாமம் முழங்கியது.
நேரம் வந்ததும் சீடர் குருவின் பூத உடலைப் புலித்தோலில் சுருட்டி தூக்கிக்கொண்டார். அப்பொழுது அவருக்கு ஒரு குழந்தையைத் தூக்குவது போன்று பலு இல்லாமல் இருந்தது. மேலும், இதற்கு முன் அறியாத ஒருவித சுகந்தமான நறுமணம் வீசியதாம். சுவாமிகள் தைப்பூச நாள் அன்று (25-1-1959) காலை 4.30-க்குச் சமாதி நிலையை எய்தாராம். அந்நேரத்தில் எங்கும் ஜோதி மயமாக இருந்த காட்சியை மக்கள் நேரில் கண்டார்கள். சுவாமிகளின் சமாதிக்கு மேல் சிவலிங்கம் வைக்கப்பட்டு தினமும் விளக்கு ஏற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் மறுநாள் அன்று சுவாமிகளுடையக் குருப்பூஜை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சுவாமிகளின் நிலத்தில் வாழும் மக்களின் நில வாடகைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் மக்களின் நன்கொடைகள் மூலம் ஜெகந்நாத சுவாமிகளின் சிவாலயத்தின் செலவுகள் நிறைவேற்றப்படுகின்றன. 1980 ஆம் ஆண்டு பினாங்கைச் சேர்ந்த வள்ளலார் அமரர் உயர்திரு ந. ஆறுமுகம் பிள்ளை ஏ.எம்.என் அவர்கள் ஒரு சிறு மண்டபத்தை அமைத்துக் கொடுத்தார். பின்பு 1990 ஆம் ஆண்டு மலாக்காவைச் சேர்ந்த அன்பர் எ.வி பசுபதி பிள்ளை அவர்கள் சுவாமிகளின் சிவாலயத்தை செந்த செலவில் புதுமையாகச் சீர் செய்து தந்த்துள்ளார். கீழே ஜெகந்நாத சுவாமி சிவாலயத்தின் சில படங்களை இணைத்துள்ளேன்.
ஆசிரமத்தில் சுவாமிகள் யோகநிலையில் இருக்கும் திருவுருவ சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சுவாமிகள் சமாதியின் மேல் சிவலிங்க சிலை ஒன்றும் வலது புறத்தில் விநாயகர் மற்றும் இடது புறத்தில் முருகன் சிலையும் வைத்து தினந்தோறும் பூஜை நடைபெற்று வருகின்றது. சுவாமிகளின் மகிமையை அனைவரும் அறிந்து சுவாமிகளின் நல்லாசியைப் பெறுவதற்கு சிங்கப்பூர், மலேசியா, இந்தியா போன்ற பல இடங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் கீழே இணைக்கப்பட்டுள்ள கானொலியில் இடம்பெற்றுள்ள தவத்திரு சித்திர முத்து அடிகளின் சீடரான தவத்திரு தங்கராச அடிகள் அவர்களின் செற்பொழிவில் இடம்பெற்ற ஜெகந்நாத சுவாமிகளின் வரலாற்றைக் கேட்டு மகிழுங்கள் (video clip).
ஓம் நமே பகவதே ஜெகந்தாதாய...
(குறிப்பு : ஜெகந்நாத சுவாமிகளின் அனுமதியின் படி இந்த வரலாற்றைச் சுவாமிகளின் துணையுடனும் பல ஊடங்களின் துணையுடனும் அடியேன் எழுதியுள்ளேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். ** ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் மறுநாள் அன்று ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகளின் ஆசிரமத்தில் குருப்பூசை நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.... மக்கள் திரளாக வந்து பூசையில் கலந்து சுவாமிகளின் நல்லாசியைப் பெறலாம்..... சுவாமிகளின் சிறப்பு வையகத்தில் பரவுக)
ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் |
சுவாமிகள் ஆசிரமம் |
சுவாமிகளின் திருவுருவ சிலை |
சித்திர முத்து அடிகளின் படம் |
சுவாமிகளின் குடிசைப் படம் |
கட்டுபாடுகள் |
மேற்கோள் நூல் பட்டியல் (reference)
>>> கிடைக்கப்பெற்றவை (retrieved from)
· ஜெகந்நாத சுவாமிகளின் வரலாறு (இரா. செயகாந்தன்)
· ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள், முதற் பதிவு, 2002, சரவணபவன்
2 comments:
nalla pathivu ., naan angu vara virumbukiren ., thankalaal mutinthaal., idavivarankalai enakku mail pannunkal ,.,
sri jeganathar swamigal aalayam
no 263 kampung samy,
jalan chenderiang lama
35000 tapah, perak, malaysia....
ithu tan mugavari aiya....
கருத்துரையிடுக