(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)
பிறப்பிலிருந்து இறக்கும் வரை மனிதன் இசையின் ஊன்றியிருக்கிறான். அழும் குழந்தை தாலாட்டுப் பாட்டுக் கேட்டவுடன் அழுகையை நிறுத்திவிட்டு தூங்க ஆரம்பிக்கிறது. தூக்கமில்லாமல் அல்லல்படுவோர் அனைவரும் நல்ல இசையை ஒலிப்பதிவு நாடா வழியாக கேட்பதின் விளைவாக நல்லுறக்கம் கொள்வதாகவும், ஒவ்வொரு நாளும் குரலிசைப்பயிற்சி செய்வதால் குறட்டையிடும் பழக்கத்தை நீக்கமுடிகிறது என்றும் மருத்துவ ஆய்வாளர் டாக்டர் எலிசபெத் ஸ்காட் (Dr. Elizabeth Scott) கூறுகிறது

உடல்நலம், மனநலம் குன்றிய நோய்களிகளும், மன இறுக்கநிலையில் (mental tension) பாதிக்கப்பட்டவர்களும் நல்ல இசையைக் கேட்பதால் நற்பயனடைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வயது முதிர்ச்சி காரணமாக நினைவாற்றலை இழந்தவர்கள் நல்லிசை வழியாக அதை மீண்டும் பெறக்கூடும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியர் பாட்டின் மூலமாக பல அரிய கருத்துக்களைக் கற்றுக்கொள்கின்றனர். பக்திப் பாடல்கள் மக்கள் மனதை இறைவன் பக்கம் ஈர்க்கின்றன. கடின வேலைச் செய்யும் உழைப்பாளிகள் தங்கள் களைப்பைத் தீர்க்க பாடிக்கொண்டே வேலைச் செய்கின்றனர்.
இறக்கும் பொழுதும், இறந்தவரின் உடலைப் புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ எடுத்துச் செல்லும் பொழுதும் ஒப்பாரி போன்ற பாடல்களும் வேறு வகைப் பாடல்களும் இசைக்கருவிகளாலும் மக்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். எனவே பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதன் இசையோடு இணைந்துள்ளான் என்பதை உணர்கிறோம்.
ஓர் இசைக்கலைஞர் “தீபக்” என்ற இராகத்தைப் பாடி நெருப்பு உண்டாகச் செய்வததாகச் சொல்லப்படுகிறது. முத்துசாமி தீட்சிதர் அமிர்தவர்ஷணி இராகத்தைப் பாடி மழை வருவித்ததாக அவரது வரலாற்றில் நாம் காண்கிறான். இந்த இராகத்தைப் போலவே மேகராகக் குறிஞ்சி (நீலாம்பரி) இராகத்தையும் சிறப்பாக இசைத்தால் வறட்சி காலத்திலும் மழையைப் பெறலாம் என்று பெரிதும் நம்பப்படுகிறது. பசுக்கள் இனிய இசையைக் கேட்பதின் விளைவாக நிரம்ப பால் கொடுப்பதாக அறிய வருகிறோம்; பயிர்க்ளும் நன்கு வளர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆகவே, இசை மனித வாழ்வை வளப்படுத்துவதற்காக இறைவன் அளித்துள்ள பெருங்கொடை என்றால் அது மிகையாகாது
0 comments:
கருத்துரையிடுக