(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)
இசைப் பயணம்.
இசைப் பயணம்.
ஐயா டாக்டர் மணிபாரதியுடன் ஒரு சிறிய நேர்காணல்...
கல்விக்கு வாணி, வில்லுக்கு அர்ஜுணன், தாண்டவத்திற்கு தில்லைகூத்தன், என்பதுபோல் வயலினுக்கு டாக்டர். மணிபாரதி என்றும் கூறலாம்.
கல்விக்கு வாணி, வில்லுக்கு அர்ஜுணன், தாண்டவத்திற்கு தில்லைகூத்தன், என்பதுபோல் வயலினுக்கு டாக்டர். மணிபாரதி என்றும் கூறலாம்.
புகழ்பெற்ற பாடல்களுக்கு (பல்லிக்கட்டு சபரிமலைக்கு, மாணிக்க வீணை ஏந்தும், பகவான் சரணம், ஜெய ஜெய தேவி துர்கா தேவி) வரிகள் வடித்த கலைமாமணி வீரமணி சோமு அவர்களின் புதல்வன் தான் டாக்டர். மணிபாரதி. இவருடைய தந்தை ஓர் இசையமைப்பாளர் ஆவார். பிரபல பாடகர் கே. வீரமணி அவர்களின் உடன்பிறந்த சகோதரரும் ஆவார்.
இவருடைய தாத்தாக்கள், திரு குஞ்சேர பாரதிகள் (பிரபலமான மீனாட்சி & முருகன் கீர்த்தனைகளின் பதிவாளர்) மற்றும் திரு கோடீஸ்வர ஐயர் (72 மேளகர்த்தா இராகங்களைக் கொண்டு பாடல்களைப் பதிவுச் செய்தவர்). இசைக் குடும்பத்தில் பிறந்த இவரும் இசையை மூச்சாக கொண்டுள்ளார்.
5 வயதில் ஒரு பாடகராக தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்தார். தனது சிற்றப்பாவுடன் பல கச்சேரிகளில் பாடியுள்ளார். 13ஆம் வயதில் வயலின் கற்கத் தொடங்கினார். வயலின் வித்வானாக தன் தொழிலை மேற்கொண்டார். 1979 ஆண்டிலிருந்து இசைத்துரையில் MSV, இளையராஜா, தேவா, ஏ.ஆர். ரகுமான், மற்றும் வட இந்தியாவிலும் 600க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் கீழ் வயலின் வித்வானாக தனது பணியை மேற்கொண்டுள்ளார். 1600 க்கும் மேற்பட்ட படங்களில் பிண்ணனில் வயலின் வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஒரியா போன்ற மொழிப் படங்களிலும் இசைச் சேவை செய்துள்ளார்.
இசையுலகில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். இவர் தனது 30 ஆண்டு காலத்தில் 52 நாடுகளில் 8000 க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் வயலின் வாசித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவது இரசிகர்கள் இருக்கிறார்கள். திரையுலகைத் தவிர்த்து பல பக்தி பாடல்களுக்கு இசையமைத்து எஸ்.ஜானகி மற்றும் வாணி ஜெயராம் அவர்களின் குரலில் வெளியிட்டும் உள்ளார்.
மேலும், கே,ஜே, யேசுதாஸ், சீர்காழி கோவிந்தராஜன், தி.எம் சௌந்தரராஜன், எஸ்.பி பாலசுப்பிரமணியம், போன்ற புகழ் பெற்ற பாடகர்களின் பாடல்களிகளில் வயலின் இசையைப் பதிவு செய்துள்ளார். கர்நாடக இசை மட்டுமின்றி மேற்கத்திய இசை யுத்திகளைத் தனது இசையில் பயன்படுத்தும் பழக்கம் இவருக்கு உண்டு. இந்தியன் முயூசிக் சிம்பனி (indian music symphony) என்ற concept ஐ தோற்றுவித்தார்.
மலேசியாவைச் சேர்ந்த படாலாசிரியர் யுவாஜி வரிகளில், சாருலத்தா மணி குரலில் சித்திரமே என்ற பாடலுக்கு இசையமைத்துள்ளார். தற்பொழுது, எஸ். ஜானகி மற்றூம் வாணி ஜெயராம் அவர்களின் குரலில் “மூகாம்பிகை அருள் கீதம்” என்ற பக்தி album இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
இவர் இவரின் பணிக்காக பல விருதுகளையும் பெற்றூள்ளார். இவரின் இசைச்சேவையைப் பாராட்டி, மலேசிய இளஞர் கழகம் ’டாக்டர்’ Honorary Doctorate (D.Lit) பட்டத்தை வழங்கி கௌரவித்தது. மேலும் மார்ச் 2012இல் டுபாயில் இவருக்கு ”வயலின் மாஸ்ரோ”(violin maestro) பட்டத்தை வழங்கி சிறப்புச் செய்தது. இவரின் இசை சேவை மிகவும் அளப்பெரியது.