RSS

இயற்கை

இருண்ட போர்வையைப் போர்த்திக்கொண்டு
உறங்குபவன் காலைச் சூரியனோ?
போர்வையை நீக்கி பூமிக்குப்
புன்னகைச் செலுத்தும் அழகன் நீயோ?

மலரை முத்தமிடும் பனித்துளியே
முகங்காட்டாமல் மறைவது ஏனோ
முத்து முத்தாய் சிதறி - சட்டென்று
மறையும்நீ மழையின் மகளோ?

உடல் வலிக்காமல் இதழ்திறக்க
உனக்கு கற்றுத் தந்தவர் எவரோ?
பெண்மையின் மென்மைக் கொண்ட - மலரே
பிரபஞ்சப் பேரழகு உன்னெழிலோ

சங்கீதம் பாடும் வண்டே - காற்றிசையோடு
சுருதிச் சேர்க்க பாடுகின்றாயோ?
உனக்குச் சுரம்பாட சொல்லித்தந்தவர்
உலகில் பிறந்த நாததேவனோ?

பச்சை ஆடை உடுத்திக்கொண்டு
பூமித்தாயின் மடியில் உறங்குபவளோ?
உலகமாதா ஈன்ற குழந்தைகளுக்கு
அடைக்கலம் தந்துக் காப்பவளோ?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆழமான சிந்தனை
ஆற்புத வரிகள்
இசை அறிவினாலோ என்னவோ
உங்களுக்கு வார்த்தைகள் கவிதையில்
அற்புதமாய் வந்து விழுகின்றன
நித்திய வாணி
நித்தம் இல்லாவிடினும்
வாரம் ஒருமுறையேனும்
முத்தான கவிதைகளை
இதுபோல்
தொடர்ந்து தா நீ

குணசேகரன்... சொன்னது…

மலரை முத்தமிடும் பனித்துளியே
முகங்காட்டாமல் மறைவது ஏனோ///nice