தொடர்ச்சி....
4. திருப்புகழ்
திருப்புகழை இயற்றியவர் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் ஆவார். இவர் குட்டரோகத்தினால் அவதிப்பட்ட வேளையில், முருகப்பெருமான் இவரைக் காத்தது மட்டுமல்லாமல் தம் மீது திருப்புகழ்ப் பாடல்களைப்பாடும் ஆற்றலையும் அளித்தார். திருவண்ணாமலை திருக்கோயிலில் முருகன் அருணகிரிநாதருக்குக் காட்சிக் கொடுத்த ஸ்தலம் இருக்கின்றது. அருணகிரிநாதர் 16000 பாடல்கள் இயற்றையுள்ளதாக சொல்லப்படுகின்றது. நமக்கு கிடைத்துள்ளது 2000 பாடல்கள் மட்டுமே. இசைக்கும் பொருத்தமான பற்பல சத்தங்களைத் தம் பாடல்களில் இவர் அமைத்துக்காட்டுவதால் இவருக்குச் “ சந்தப்பாலப் பெருமாள்” என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது. தமிழ்கவியான தாயுமானவர், அருணகிரியாரை “வாக்கிற்கு அருணகிரி” என்றும் வாழ்த்துள்ளார். தேவாரங்களைப் போல அருணகிரிநாதரும் பல திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்கள் மீதுட் திருப்புகழ் பாடல்களை இயற்றியுள்ளார்.
5. திரு அருட்பா
இதை இயற்றியவர் 19-ஆம் நூற்றாண்டில் (1823-1874) வாழ்ந்த ராமலிங்க அடிகளார். இவர் சமரச சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்து அதற்கேற்ற வகையில் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் இறைவனை அருட்பெருஞ் சோதியாக கண்டார். மனிதன் ஒளியைக் கண்டு, ஒளியை நினைத்து, ஒளியில் நின்று நிலவினால் ஒளியாவான் என்று போதித்தார். அடிகளாரின் பாக்கள் எளிய சொற்களில் ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டவை. இறைவனைத் தலைவனாக்கித் தம் தலைவியாக அமைத்து பாடும் பாடல்களும் உள்ளன.
திருவருட்பா 6 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது. “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே” என்று அடிகளார் இறைவனைப்பற்றிப் பாடியது அவர் நூலுக்கே பொருந்தும் என டாக்டர் தேவசேனாபதி இயம்புகின்றார். திருவருட்பாவில் நாம் காணும் பாக்கள் திருவாசகத்தைப் பெரிதும் நினைவூட்டுவன. இராமலிங்க அடிகளார் திருவருட்பாவை இயற்றுவதற்குக் காரணம் அவர் தாம் பெற்ற இன்பத்தைப் பிறரோடு சேர்ந்து நுகர விரும்பியதுதான்.

1 comments:
நல்ல ஆன்மீக பதிவு... நன்றி
கருத்துரையிடுக