சிவ பூஜையில் கரடி(கை)...l

(தலைப்பை கிளிக் செய்து முழுமையாக படியுங்கள்)

சிவ பூஜையில் கரடி(கை)...

கரடிகை என்பது நம் இலக்கியங்களில் இடம்பெரும் ஒருவகைத் தோற்கருவி. கரடி கத்தினாற்போல் ஓசை உடையதாம். இந்த ஓசை காரணம்பற்றியே இந்தக் கருவி கரடிகை என்னும் பெயர் பெற்றது என்று கூறுகிறார் அடியார்க்கு நல்லார். 

கரடிகை அளவு கருவியாகிய மரக்கால் போன்று அமைப்புக் கொண்டது. இசை நூலில் இந்தக் கருவி சமக்கருவி என்ற வகையின் பாற்படுகிறது. வேறு வகையான பிரிவில் தலைக்கருவியாகிறது. அக முழவு வகையைச் சார்ந்தது. பிரம்மன், ருத்திரன், விஷ்ணு என்ற கடவுளர் மூவர்க்கும் இயற்றப்படுவனவாகக் கூறப்படும் கருவிகளுள் கரடிகை என்ற இந்தத் தோற்கருவியும் ஒன்று.

கரடிகை பலாமரத்தால் செய்யப்படும். கனகரடிகை எனக் கூறி, கீழ்க்காணும் அளவுகள் கூறப்படுகின்றன.

சிவ பூஜையில் கரடி என்று சொல்வது கரடி(மிருகத்தை) குறிப்பதல்ல... கரடிகை என்ற வாத்தியம் தான் சரி...   • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

வலைச்சர தள இணைப்பு : பாரதியார் வியந்த பெண்மணியும்...

My Mobile Studios சொன்னது…

arumai.