பரதமும் அபிநயமும்....

பரத நாடியம் தமிழனின் சிறப்பான கலைகளில் ஒன்று. இக்கலை மிகவும் தொன்மை வாய்ந்தது.  புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.   பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது.  இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும்
     இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது
     உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார். சலங்கை அல்லது சதங்கை என்பது காலில் அணியப்படும் அணியாகும். பொதுவாக பரதநாட்டியம் முதலான இந்திய நடனக்கலைகளை ஆடும் போது காலில் சலங்கை அணிவர்.
     பரத நாட்டிய கலைகளில் மிக முக்கியமான ஒன்று அபிநயம். கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்த அபிநயம் உதவும். அபிநயத்தின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு உணர்த்தலாம். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும். அவை ஆகார்ய அபிநயம், வாசிக அபிநயம், ஆங்கிக அபிநயம் மற்றும் சாத்விக அபிநயம் என்பனவாகும்.
ஆகார்ய அபிநயம்
அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறும். மற்றொருவரைப் போல் வேடமிட்டுக் கொண்டு ஆடுவது.
வாசிக அபிநயம்
இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். பிறர் பாடவும் அபிநயிப்பார். தற்பொழுது மற்றொருவர் பக்க வாத்தியத்துடன் இசைப் பாடல் பாடவும் நாட்டியக் கலைஞர் அபிநயம் பிடிப்பர்.
ஆங்கிக அபிநயம்
உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக   அபிநயம். உடல்உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு.இவற்றில் கை முத்திரை சிறப்பிடம் பெறும், கை முத்திரை என்பது விரல்களின்     செய்கைகளாகும். பரத நாட்டியத்தில்ஒற்றைக்கை முத்திரைகளும் இரட்டைக் கை முத்திரைகளும் உண்டு.
சாத்விக அபிநயம்
உள்ளத்தில்     உணர்ச்சிகள்     எழும், உணர்ச்சிகளால் உடலில் மாற்றங்கள் உண்டாகும். எடுத்துக்காட்டாகப் பயம் ஏற்படுகிறது. அப்பொழுது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இதற்கு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும். சுவை உணர்வுகள் ஒன்பது. இதை நவரசம் என்று சொல்வர். ஒன்பான் சுவை என்றும் சொல்வர். அவையாவன: பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை     ஆகும்.     இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல்

பாவங்கள்அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:
ஸ்ருங்காரம் (வெட்கம்), வீரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம்(சிரிப்பு), பயானகம் (பயம்), பீபல்சம் (அருவருப்பு), ரெளத்ரம் (கோபம்), சாந்தம் (அமைதி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS