படர்ந்து கிடக்கும் கடலை
பாயில் சுருட்டி மகிழ்ந்தேன்
வெள்ளை காகக் கூட்டம்
வானில் பறக்கக் கண்டேன்
பார்வைக்குப் படாத அணுவின்
பிரசவ வலியைக் கேட்டேன்
மங்கை சூடா தாமரையை
மணலில் நட்டு வளர்த்தேன்
வின்மீகளைக் கையில் பிடித்து
விளையாடி நேரம் கழித்தேன்
செவ்வாயில் பாய் விரித்து
சோளப் பொரி தின்றேன்
இரவின் கருமை நீங்க-வானில்
வெள்ளை அடித்து பார்த்தேன்
வானவில்லில் படுக்கை விரித்து
வசந்தமாக நானும் உறங்கினேன்
தவளை தன் குஞ்சுகளுக்குத்
தாலாட்டுப் பாடக் கேட்டென்
---நித்தியவாணி---

Time in Kuala Lumpur 





3 comments:
அருமை அருமை
மிக அழகான கற்பனை
அளவான வார்த்தைப் பிரயோகம்
பதிவுலகிற்கு புதிய கவிஞரின்
வரவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
அடுத்த கவிதையை ஆவலுடன் எதிர்பார்த்து...
நான் இதுவரை படித்திடாத அருமையான கற்பனை வரிகள் மிகவும் அருமை.
chinna chinna aasai pattu polave irukkiruthu
கருத்துரையிடுக