இவர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர். அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக விளங்கினார். பாண்டியன், ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டமளித்துச் சிறப்பித்தான். அரசனின் ஆணைப்படி குதிரை வாங்கச் சென்றார். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவனே ஞானாசிரியனாக வந்து போதிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பிறகு ஆலயத் திருப்பணிகளிலும், அடியார்களுக்கும், மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைச் செலவிட்டார். இதனை அறிந்த பாண்டியன், பல தண்டனைகளைக் கொடுத்தான். எனவே இறைவன் நரிகளைப் பரிகளாக்கியும், பிட்டுக்கு மண் சுமந்தும் பிரம்படி பட்டும் பலதிருவிளையாடல்களை மணிவாசகருக்காக நிகழ்த்தினான். பாண்டியனும் உண்மை உணர்ந்தான். மணிவாசகரும் இறைத்தொண்டில் ஈடுபடலாயினார். இவர் இயற்றியவை திருவாசகம், திருக்கோவையார் ஆகும். அவை நெஞ்சுருக்கும் தீந்தமிழ்ப் பாடல்கள்.
தெய்வ மணங்கமழும் திருவாசகப் பாடல்களைப் பாராட்டி இராமலிங்க அடிகள்,
வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்று போற்றிப் பாடியுள்ளார்.
டாக்டர் ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் திருவாசகத்தை மொழி பெயர்த்துள்ளார். சிவபுராணம் தொடங்கி, அச்சோப் பதிகம் ஈறாக 51 பகுதிகளையும் 656 பாடல்களையும் கொண்டது திருவாசகம், மிக எளிய சொற்கள், தெளிவான கருத்துகள், ஆழமான தத்துவங்கள் பொதிந்தவை. உள்ளத்தின் உணர்ச்சிப் பெருக்கை அப்படியே வெளிப்படுத்திய பாடல்கள்.
பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே
(பிடித்தபத்து - 9)
இளம்பெண்கள் ஆடிப்பாடும் விளையாட்டுகளைக் கொண்டு, நாட்டார் பாடல்கள் அமைப்பில் பாடியுள்ளார். அவை திருஅம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருத்தோள் நோக்கம், திருச்சாழல், திருப்பொன்னூசல் போன்றவை ஆகும்.
தத்துவத்தின் கொடுமுடியாக (சிகரமாக) விளங்குவன இவர் பாடல்கள் ‘திருவெம்பாவை’ மார்கழி நோன்பு பற்றியது. இது பண்டைத் தமிழ் மரபைப் பின்பற்றியது. மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் கோவை இலக்கியங்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம். கோவை நூல்களில் தலைசிறந்தது. பேரின்பக் கருத்தும் சிற்றின்பக் கருத்தும் பொருந்தியுள்ள இந்நூற் பெருமையைப் பேராசிரியர் உரையால் அறியலாம். 400 கட்டளைக் கலித்துறையால் ஆன நூலாகும். திருவாசகம், திருக்கோவையார் இவ்விரண்டும் எட்டாந்திருமுறையாகும்.
1 comments:
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)
(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
கருத்துரையிடுக